டிசம்பர் 30ல் மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி.. என்னெல்லாம் சிறப்பு இருக்கு தெரியுமா?

Su.tha Arivalagan
Dec 27, 2025,02:54 PM IST

- தி. மீரா


மார்கழி மாத ஏகாதசி.. டிசம்பர் 30ம் தேதி கடைப்பிடிக்கப்படவுள்ளது. மார்கழி மாதத்தில் வரும் சுக்ல பக்ஷ ஏகாதசியே வைகுண்ட ஏகாதசி. இந்த நாள் மிகப் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் பெருமாள் கோயில்களில் வைகுண்ட வாசல் திறக்கப்படும். அந்த வாசல் வழியாகச் செல்வோர் வைகுண்ட பதவி பெறுவர் என்பது பக்தர்களின் நம்பிக்கை.


இந்த தினத்தில் திருமால் (விஷ்ணு) தன் பக்தர்களுக்கு மோட்ச அருள் வழங்குவதாக புராணங்கள் கூறுகின்றன. வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால், முன்னாள் பாவங்கள் நீங்கி மனம் தூய்மையடையும் என்று நம்பப்படுகிறது. 




உண்ணாவிரதம் அல்லது ஒருவேளை உணவு, நாமஜபம், விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது சிறப்பாகக் கருதப்படுகிறது. ஸ்ரீரங்கம் போன்ற திவ்யதேசங்களில் திருவாய்மொழி பத்துநாள் உற்சவம் கோலாகலமாக நடைபெறும்.


உலகப் பந்தங்களில் இருந்து விடுபட்டு இறைவனை அடைவதற்கான ஆன்மீக வாயிலாக இந்த நாள் கருதப்படுகிறது. ஏழைகளுக்கு தானம், அன்னதானம், சேவை செய்வது மிகுந்த புண்ணியம் தரும். இந்த நாளில் பிரார்த்தனை செய்வதால் மன அமைதி, குடும்ப நலம், வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்று நம்பப்படுகிறது.


வைகுண்ட ஏகாதசி என்பது வைணவ சமயத்தினரின் மிக முக்கியமான பண்டிகையாகும். “வைகுண்ட வாசல் வழியே நடக்கும் பக்தன், வாழ்வின் இருள் கடந்து ஒளியை அடைவான்” 


(பாவலர் முனைவர் தி.மீரா, ஈரோடு)