ரஜினிகாந்த், விஜயகாந்தை விட விஜய் என்ன பெரிய ஆளா? தவாக தலைவர் வேல்முருகன்

Meenakshi
Jun 16, 2025,06:22 PM IST

கிருஷ்ணகிரி: சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்ட ரஜினிகாந்த், விஜயகாந்த்  தவறு செய்தபோது அதை தவறு என்று கூறியவன் நான். ரஜினி ரசிகர்கள், விஜயகாந்த் ரசிகர்களை விட நீங்கள் என்ன பெரிய ஆள்களா? இவர்கள் தான் மாணவர்களை ஊக்கப்படுத்துகிறார்களா என்று தவாக தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.


கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் பேசுகையில், கலைஞர் ஆட்சியில் போராடி வாதாடி இன்றைக்கு 36 மெடிக்கல் கால்லூரிகளை தமிழ்நாட்டிற்கு  கொண்டு வந்தவர் வேல்முருகன். கூத்தாடி என்றால் உங்களுக்கு குறைந்து விட்டது என்கிறீர்கள். நாங்கள் தற்குறி  என்று எங்களை சொல்லக்கூடிய தற்குறிகளுக்கு நாங்கள் சொல்கிறோம். தமிழக வாழ்வுரிமை கட்சியின் வரலாற்றை, வேல்முருகன் டி என்கிற பக்கத்தில் பதிவு செய்திருக்கேன். கட்சி தொடங்கிய நாளிலிருந்து அதை பார்த்து படித்து தெரிந்து கொள்ளுங்கள் தற்குறிகளே, ஆனால், இன்றைக்கு தற்குறிகள் கேட்கிறார்கள் வேல்முருகன் யார் என்று.


நீங்கள் எல்லாம் சினிமாவில் இருந்த போது, தமிழர் விடுதலைக்காக களம் கண்டு தமிழ்நாட்டில் பணியாற்றியவன் இந்த வேல்முருகன். நான் பேசியதில் என்ன தவறு இருக்கிறது.  சீட்டு எழுதி மாணவர்களை கூப்பிட்டு தேர்ந்தெடுத்து அதில் பேச வைக்கிறார்கள். எங்க அண்ணா உங்க அண்ணா என்று கூறுகிறார்கள். உங்கள் படத்தில் முழுக்க முழுக்க முஸ்லிம் என்றால் தீவிரவாதிகள், குண்டு வீசுபவர்கள், தேசவிரோதிகள் என்று காண்பித்தீர்கள். ஆனால், இன்று அதே முஸ்லிம்களை மேடையில் கூப்பிட்டு வந்து நிறுத்தி கட்டி பிடிக்கிறீர்கள். அன்பை பரிமாறுகிறீர்கள். அவர்களிடம் மைக்கை கொடுத்து பேச வைக்கிறீர்கள்.வெளி நாட்டு நிறுவனங்கள் கொடுத்த குளிர்பானங்களை வைத்துக்கொண்டு வேல்முருகன் நடிக்கவில்லை.  




பொதுமக்கள் சொல்லட்டும் வேல்முருகன் பேசியது தவறு என்று. பொதுமக்கள் தான் எனக்கு எஜமான்கள் அவர்கள் தான் எனக்கு ஓட்டு போடுகிறார்கள். நீங்கள் யார்?  தனிமனித ஒழுக்கம் உள்ளவரா? வரி செலுத்துகிறீர்களா? டாடி மம்மி வீட்டில் இல்லை தடை போட யாரும் இல்லை என்ற பாட்டை தமிழ் மக்கள் ஆதரிக்கிறீர்களா? யாரோ ஒரு தொழிலதிபர் சால்வை போர்த்தி பரிசு கொடுக்கிறார் என்றால் அவர் உங்கள் பிள்ளையை கட்டிப்பிடிக்க அனுமதிப்பீர்களா? ஒரு பெண் வயது முப்படைந்த பிறகு எந்த சினிமாக்காரர்களையும் கட்டிப்பிடிப்பதையும் ஹார்ட்டின் விடுவதையும் அனுமதிக்க கூடாது.


இதனை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஒரு கட்சித் தலைவனாக அறிவுரை சொன்னேன். 150 தமிழ் தேசிய அமைப்புகள், பெரியார் அமைப்புகள், முஸ்லிம் அமைப்புகள், கிறிஸ்து அமைப்புகளை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்துகிறேன். இவர்கள் எல்லாம் அறிவில்லாமல் என் தலைமையில் இயங்குகின்றனவா? உங்கள் அண்ணன் மட்டுமல்ல இந்த நாட்டின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்ட ரஜினிகாந்த், விஜயகாந்த்  தவறு செய்தபோது அதை தவறு என்று கூறியவன் நான். ரஜினி ரசிகர்கள், விஜயகாந்த் ரசிகர்களை விட நீங்கள் என்ன பெரிய ஆள்களா? இவர்கள்தான் மாணவர்களை ஊக்கப்படுத்துகிறார்களா?. 


இவர்கள் தான் பரிசுகளை கொடுக்கிறார்களாம். தமிழ்நாட்டில் துணை நடிகர் பாலா என்பவர் கதாநாயகன் அல்ல. தான் சம்பாதித்த பணத்தை மக்களுக்கு வீடுகள் கட்டி, ஆம்புலன்ஸ் வாங்க உதவி புரிந்து வருகிறார். அவர் சூட்டிங் நடத்தவில்லை, சோ நடத்துவதில்லை. ராகவா லாரன்ஸ் தான் சம்பாதித்த பணத்தை எத்தனையோ முதியோர் இல்லங்கள் ஆசிரமங்களுக்கு வழங்கி வருகிறார். அவர் எப்போதும் சூட்டிங் நடத்தவில்லை, ஷோ நடத்தவில்லை. அரசியல் அரசியலுக்கு வாங்க மக்களோடு நில்லுங்கள் என்று தெரிவித்துள்ளார்.