இனியும் உலக அழகி போட்டி எங்கும் நடக்காது!!

Su.tha Arivalagan
Nov 25, 2026,11:07 AM IST

- வெண்பாவணன்


தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்க  யாரும் விரும்பவில்லை.. !!

மலர் கண்காட்சியை மக்கள் மறந்தனர்..!! 


மோனோலிசா ஓவியம் விற்பனைக்கு விலை போகவில்லை...!! 

தேவலோக ரம்பை,ரதி ,மேனகா என அனைவரும் சபையை இன்றுடன் காலி செய்தனர்....!!


தடாகத்து தாமரை பூ தயக்கத்துடன் வெளியில் தலை காட்டுவது இல்லை....!!


அட நிலவும் 

கூட களவு போனதோ..!? 

வந்த எந்த சுவடும் 

வானில் இல்லை!!


 


ஒருத்தி வந்து பொருத்தி வைத்த 

தீ தான்..

மொத்த  

கரு(ர்)வத்தையும் தன் புருவ வில்லால் புரட்டிப் போட்டவள்..


பொசுக்கென்று மனதை உருட்டி போட்டவள்....!!


இவளே.. 

இவள் தானோ..!!

ஏ ஐ (AI)பெற்றெடுத்த 

மா யை நீதானோ..!!?

    

(க. சரவணன். பால்வளத் துறையில் விரிவாக்க அலுவலராக பணியாற்றி வருகிறார். வெண்பாவணன் என்ற புனைப்பெயரில்  கவிதை இயற்றி வருகிறார். சுமார் 25 வருடங்களாக ஓவியப் பணியில் ஈடுபட்டு வருகிறார். மரக் கன்று நடுவதில் மிகுந்த ஆர்வம்.  குழந்தைகளுக்கு ஓவியம் கற்றுக் கொடுக்கிறார். குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு கல்வி சார்ந்த ஆலோசனை வழங்கியும், அவர்களின் கல்வி நிலை, குடும்ப சூழல் பொருளாதார நிலை என குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கியும் வருகின்றார்)