தேன் மழை
Nov 21, 2026,04:27 PM IST
- வெண்பாவணன்
மேகம் ரெண்டு
முட்டிக் கொள்ளும் -இடி
கைகள் ரெண்டு
தட்டிச் செல்லும்...
மின்னல் சாட்டை வெட்டிச்செல்லும்-
மழை வானிலிருந்து
முட்டிக் கொள்ளும்..
கிழிந்த வானக்
கூரையில்
பொழிந்த கான மழைத்துளி...!!
அமுத மழை
பொழியுதே
அனைத்து உயிரும் நனையுது.... !!
மண்ணை முத்தமிட இத்தனை
மழைத்துளியா??
அத்தனை முத்தங்களும் அமுத
தேன்துளியா??
அருவி வீணை மீட்டியே சுரங்கள் பல
காட்டினாள்...
நதிகள் வளைவு ஓடியே
நளின அழகு ஊட்டினாள்..
கலந்த
குங்குமம்....!!!
(வெண்பாவணன் என்கிற க.சரவணன் M.A., B.Lit., (Tamil) D.T.Ed., தமிழ் இலக்கிய களஞ்சிய ஒருங்கிணைப்பாளர்... கொங்கணாபுரம், எடப்பாடி வட்டம், சேலம் மாவட்டம்)