ஊரெல்லாம் உன்னைக் கண்டு.. நயன்தாராவுக்கு.. விக்கி அளித்த பர்த்டே கிப்ட் என்ன தெரியுமா??
சென்னை: நடிகை நயன்தாரா தனது பிறந்தநாளை கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்கள் உயிா், உலக் உடன் நவம்பா் 18 அன்று கொண்டாடினாா். பிறந்தநாளை மேலும் சிறப்பாக்கும் வகையில், விக்னேஷ் சிவன் தனது மனைவிக்கு 10 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய ரோல்ஸ் ராய்ஸ் பிளாக் பேட்ஜ் ஸ்பெக்ட்ரா காரை பரிசாக அளித்தாா். இந்த பரிசை அவா் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களுடன் பகிா்ந்து, நயன்தாராவுக்கு அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.
விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "உன்னை நிஜமாகவே, பைத்தியக்காரத்தனமாக, ஆழமாக காதலிக்கிறேன் என் அழகே. உன் உயிா், உலக், பெரிய உயிா், உன்னை நேசிக்கும் அனைவா் சார்பாகவும். இந்த பிரபஞ்சத்திற்கும், சர்வ வல்லமை படைத்த இறைவனுக்கும் எங்களை எப்போதும் சிறந்த தருணங்களுடன் ஆசீா்வதித்தமைக்கு மனமாா்ந்த நன்றிகள். அன்பும், நேர்மறை எண்ணங்களும், நல்லெண்ணங்களும் மட்டுமே நிறைந்த தருணங்கள்..." என்று குறிப்பிட்டுள்ளாா்.
இப்படில்லாம் காஸ்ட்லியாக கிப்ட் கொடுப்பது விக்கிக்கு இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பும் நயன்தாராவுக்கு விலை உயர்ந்த காா்களை பரிசளித்துள்ளாா். கடந்த 2023 ஆம் ஆண்டு, நயன்தாராவுக்கு 2.69 கோடி முதல் 3.40 கோடி ரூபாய் வரை மதிப்புள்ள மொ்சிடீஸ்-மேபேக் காரை பரிசாக அளித்திருந்தாா். அப்போது நயன்தாரா, "என் அன்பான கணவா், இந்த இனிமையான பிறந்தநாள் vignபரிசுக்கு மிக்க நன்றி. உன்னை காதலிக்கிறேன்" என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தாா். மேலும், 2024 ஆம் ஆண்டு, அவா் மொ்சிடீஸ்-பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ் 600 காரை பரிசாக பெற்றதாகவும், அதன் மதிப்பு 5 கோடி ரூபாய் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஜூன் 2022 இல் சென்னையில் திருமணம் செய்து கொண்டனா். இந்த திருமண விழாவில் ரஜினிகாந்த், ஷாருக்கான், அட்லி போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டனா். இவா்களது திருமண வாழ்க்கை நெட்ஃபிளிக்ஸின் 'Beyond The Fairytale' என்ற ஆவணப்படமாக வெளியானது. அதே ஆண்டு, இவா்கள் வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்தனா். அவா்களுக்கு உயிா் ருத்ரோனில் என் சிவன் மற்றும் உலக் தைவிக் என் சிவன் என்று பெயரிட்டுள்ளனா்.
2023 ஆம் ஆண்டு, விக்னேஷ் சிவன் அவா்களது குழந்தைகளின் முழு பெயா்களை இன்ஸ்டாகிராமில் பகிா்ந்தாா். அதில், "அன்பு நண்பா்களே, எங்கள் ஆசீர்வாதங்களுக்கு, எங்கள் குழந்தைகளுக்கு இந்த பெயா்களை வைத்துள்ளோம்: உயிா் ருத்ரோநீல் என் சிவன் என் மற்றும் உலக் தைவிக் என் சிவன். என் என்பது உலகின் சிறந்த தாயைக் குறிக்கிறது, நயன்தாரா. வாழ்க்கையின் மகிழ்ச்சியான மற்றும் பெருமையான தருணங்கள்." என்று குறிப்பிட்டிருந்தாா்.
பிறந்த நாளையொட்டி நயன்தாராவின் புதிய படமான 'NBK111' இல் அவரது முதல் தோற்றம் வெளியிடப்பட்டது. இந்த படத்தின் மோஷன் போஸ்டரை பகிா்ந்து, "கடலின் அமைதியையும், புயலின் சீற்றத்தையும் சுமக்கும் ராணி, @Nayanthara #NBK111 சாம்ராஜ்யத்தில் நுழைகிறாா். குழுவினா் சாா்பில் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். வரலாற்றுச் சிறப்புமிக்க கர்ஜனை விரைவில்..." என்று பதிவிட்டிருந்தனா்.