கறுப்பு நிற கோட்டில்.. வித்தியாசமான கெட்டப்பில் பதவியேற்பு விழாவில் விஜய்!

Su.tha Arivalagan
May 10, 2026,09:51 AM IST

சென்னை: பிரச்சாரக் களத்தில் காணப்பட்ட விஜய்யாக அல்லாமல், வேஷ்டி சட்டையிலும் வராமல், வித்தியாசமாக கறுப்பு நிற கோட்டில் விஜய் படு கெத்தாக பதவியேற்பு விழாவில் பங்கேற்றுள்ளார். இதுவே, தான் ஒரு வித்தியாசமான முதல்வராக இருக்கப் போவதை விஜய் மறைமுகமாக உணர்த்துவது போல உள்ளது.


விஜய் என்ன காஸ்ட்யூமில் வந்தாலும் அது கண்ணைக் கவரும். அதுதான் அவரது ஸ்டைலிஷ் அடையாளமும் கூட. அரசியலுக்கு வந்த பின்னர் அவர் பெரும்பாலும் சாக்லேட் கலர் பேன்ட்டும், வெள்ளை சட்டையும் அணிந்துதான் வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் பதவியேற்பு விழாவுக்கு அவர் எந்த உடையில் வருவார் என்ற பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.


தமிழர்களின் அடையாளமான வேட்டி சட்டையில் அவர் வரக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் தமிழர்களின் இன்னொரு முக்கிய அடையாளமான, கறுப்பு நிற கோட்டில் படு டீக்காக வந்திருக்கிறார் விஜய்.




படு ஸ்டைலிஷாக காணப்படும் விஜய்யைப் பார்த்து அவரது கட்சியினர் மட்டுமல்லாமல் ஸ்டேடியத்தில் உள்ள அனைவருமே ஹேப்பியானதையும் காண முடிந்தது.


தமிழ்நாட்டு அரசியல்வாதிகளில் குறிப்பாக முதல்வர்களில் இதுவரை யாருமே இப்படி ஒரு உடையில் வந்து பதவியேற்பு எடுத்துக் கொண்டதில்லை. இதிலிலும் விஜய், தான் மற்றவர்களை விட வித்தியாசமானவர் என்று நிரூபித்து தன் மீதான எதிர்பார்ப்புகளை மேலும் அதிகரித்துள்ளார் என்றுதான் பார்க்க வேண்டியுள்ளது.