அதையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.. நீங்க யாரும் ஹர்ட் ஆகாதீங்க.. தவெக தலைவர் விஜய்
சென்னை: மாமல்லபுரத்தில் நடந்த மகளிர் தின விழாவில் பேசிய தவெக தலைவரும், நடிகருமான விஜய், சமீப காலமாக நடந்து வரும் விஷயங்களைப் பார்த்து நீங்கெல்லாம் ஹர்ட் ஆகியிருக்கீங்க.. உங்களைப் பார்த்து நானும் ஹர்ட் ஆகிறேன். அதையெல்லாம் நான் பார்த்துக்கிறேன். விட்ருங்க என்று விஜய் பேசினார்.
தனது மனைவி சங்கீதா விவகாரம் தொடர்பாகவே இவ்வாறு விஜய் பேசியதாக கருதப்படுகிறது. இதுதவிர இந்தக் கூட்டத்தில் பேசிய விஜய், மகளிர் தினத்தையொட்டி பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்தார். அதன் பட்டியல்:
பெண்கள், குழந்தைகள் மற்றும் மூதாட்டிகள் நலனுக்காக தனித் துறை எனது ஆட்சியில் உருவாக்கப்படும்.
மதிப்புமிகு மகளிர் திட்டத்தின் கீழ் 60 வயதுக்குட்பட்ட, அரசு ஊழியர்கள் அல்லாத பெண்களுக்கு மாதம் ரூ. 2500 உரிமைத் தொகை
அண்ணபூரணி திட்டத்தின் கீழ் குடும்பத்துக்கு ஆண்டுக்கு 6 காஸ் சிலிண்டர்கள் இலவசம்
இளம் பெண்களுக்கு, 1 பவுன் தங்கமும், தரமான பட்டுச் சேலையும், தாய் வீட்டிலிருந்து அண்ணன் சீராக அளிக்கப்படும்
ஆண்டுக்கு ரூ. 15,000 பொருளாதார உதவித் தொகை
அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கும் சலுகை.
பெண்கள் பாதுகாப்புக்கு ராணி வேலுநாச்சியார் படை .சாதாரண உடையில்இருக்கும் பெண்கள் பாடிகேமுடன் பாதுகாப்பில் இருப்பார்கள்.
அஞ்சலை அம்மாள் அதிவிரைவு பெண்கள் நீதிமன்றம் அமைக்கப்படும். பெண்களுக்கு எதிரான வழக்குகள் விரைவாக முறையாக விசாரிக்கப்பட்டு தீர்ப்பும் விரைவாக அளிக்கப்படும்.
தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தின் கீழ் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும், அரசின் சார்பில் மோதிரம் அளிக்கப்படும். குழந்தைக்குப் பேபி கிட்டும் வழங்கப்படும்.
ஸ்மார்ட் பேனிக் பட்டன்கள் அறிமுகம். 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு மையத்துடன் இணைக்கப்படும். ஷேர் ஆட்டோக்கள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பொருத்தப்படும். 5 நிமிடத்தில் பதிலும் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்.
சிசிடிவி கேமராக்களே இல்லை என்று கூறும் அளவுக்கு ஜீரோ டார்க் ஸ்பாட்ஸ் உரவாக்கப்படும்.
அதி நவீன கட்டுப்பாட்டு மையம் அமைத்து சிசிடிவி கட்டமைப்புகளைக் கண்காணிக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும். கட்டளை மையம் அமைக்கப்படும்.
அனைத்துப் பெண்களுக்கும் விலையில்லான சானிட்டரி பேட்ஸ் ரேஷன் கடகள், பள்ளி கல்லூரி மூலம் வழங்குவது உறுதி செய்யப்படும்.
சிங்கப் பெண்கள் மேம்பாட்டுத் திட்டம் - சுய உதவிக் குழுக்களின் திறன் மேம்படுத்தப்படும். ரூ. 5 லட்சம் நிதியுதவி,100 சதவீதம் மானியமாக வழங்கப்படும்.