திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!

Meenakshi
Sep 06, 2025,04:58 PM IST

சென்னை: தளபதி 2026 அரசியல் பிரச்சார பயணம் என்ற பெயரில், வருகிற செப்டம்பர் 13ம் தேதி திருச்சியில்  இருந்து அரசியல் சுற்றுப்பயணத்தை தவெக தலைவர் விஜய் தொடங்குகிறார்.


தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர். இதனையடுத்து கடந்தாண்டு கட்சி தொடங்கி விஜய். 2026 தேர்தலை நோக்கி தனது கட்சி பணிகளை விறுவிறுப்பாக செய்து வருகிறார். சமீபத்தில் தான் மதுரையில் தனது கட்சியின் 2வது மாநாட்டை மிக பிரம்மாண்ட அளவில் நடத்தினார். அதனைத்தொடர்ந்து செப்டம்பர் 13ம் தேதி திருச்சியில் இருந்து தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். அதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.




திருச்சியில் 2 இடங்களில் விஜய் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் என்றும், ஸ்ரீரங்கம் கோயில் முன்பிருந்தே விஜய் தனது பிரசாரத்தைத் தொடங்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான ஏற்பாடுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.


முதல் கட்ட சுற்றுப்பயணம் 10 நாட்கள் நீடிக்கும் என்றும், இந்த முதற்கட்ட சுற்றுப்பயணத்தில் 10 மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் விஜய் பிரச்சாரம் செய்ய உள்ளராம். இதனை தொடர்ந்து முக்கிய பகுதிகளில் திறந்த வேனில் நின்றபடி விஜய் பேசவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றனவாம்.