மாயா ஜாலம்!
Jul 21, 2026,02:32 PM IST
- விஜயலக்ஷ்மி கண்ணன்
சாரல் மழைத்
தூறல் நின்றவுடன்,
சாரமதியின் ராகம்
ஈரக் காற்றோடு,
செவிக்குள்
இனிதாக இழைந்து,
ஆவிக்குள் மெல்ல நுழைந்து,
மண்ணுலகை
விண்ணுலகாக்கியது.
நிலவோடு
தாரகைகள் மின்ன,
மேனகை மயிலாட
ரம்பை ஒயிலாட,
ஊர்வசி என்னருகில்
நர்த்தனமாட,
இந்திர லோகம்
தானோ!!
(விஜயலக்ஷ்மி கண்ணன் வழக்கறிஞர், கவிஞர், எழுத்தாளர்,பட்டிமன்றப் பேச்சாளர் என பன்முகம் கொண்டவர். வசிப்பது சென்னை அருகே கூடுவாஞ்சேரி)