தமிழுக்கு ஓர் இழப்பு!
Sep 12, 2026,03:59 PM IST
- விஜயலக்ஷ்மி கண்ணன்
பட்டிமன்றம் சிறப்பித்த
சிந்தனையாளர்
சிரித்தவண்ணம்
தீர்ப்பு சொன்ன
தமிழ்ப் புதல்வர்
பேச்சாளர்
பாப்பையா அவர்கள்.
நம்மைவிட்டு போனாலும்
நம் நெஞ்சைவிட்டு போகா
நாகரீக பட்டிமன்றம்
நடத்துனர்.
இலக்கிய வானில்
இரவு பகல் என பாராது
இன்முகம் காட்டி
நட்சத்திரமாக உலா வந்தவர்.
பேச்சுக்கு பாரதி மூச்சுக்கொரு ராஜா என
மேடை அமைத்த
பட்டிமன்றத்
தலைவர்!
இன்னும் பல பட்டிமன்றங்கள்
அமையும்
இன்னவர் நடுவர் என்றால்
திரண்டிடும் கூட்டம்
இந்த இழப்பை
தாங்கிடுமா?
தமிழ் தாயின்
மகன்
இலக்கிய பண்பாளர்
என்றும் நம்
சாலமன் பாப்பையா அவர்கள்!!
இனிமையான பேச்சு
சிரித்த முகம்
எளிமையான தன்மை
அரவணைக்கும்
சுபாவம்,
இத்தனைக்கும்
சொந்தக்காரர்
நம் சாலமன் பாப்பையா
அவருக்கு இணை யார் ஐயா?
(விஜயலக்ஷ்மி கண்ணன் வழக்கறிஞர், கவிஞர், எழுத்தாளர், பட்டிமன்றப் பேச்சாளர் என பன்முகம் கொண்டவர். வசிப்பது சென்னை அருகே கூடுவாஞ்சேரி)