கரும்பாக இல்லறம் இனிக்க காவேரி தாய் வேகமாய் வருகிறாள்!
Aug 04, 2026,11:59 AM IST
- விஜயலக்ஷ்மி கண்ணன்
பெருக்கெடுத்து ஓடும் புது, வெள்ளம் போல்
கரும்பாக இல்லறம் இனிக்க
காவேரி தாய்
வேகமாய் வருகிறாள்.
ஆற்றில் வண்ண மலர்கள் தூவி
அகல் விளக்குகள் ஏற்றி
படகு விட்டு மகிழும் திருநாள்
காவேரி கரை மீது கன்னியர்கள்
விளையாடி
இன்ப தமிழ் பாடல் பாடி
காவிரியை அழைக்கும் அழகே அழகு!
சுமங்கலிகள் மஞ்சள் குங்குமம்
தாம்பூலம் பரிமாறி மங்களம் முழங்கினர்.
எங்கும் அன்பு பொங்கட்டும்
இன்பம் சேர்ந்து
இன்னிசையாகட்டும்
காற்றோடு காதல் பேசி இளசுகள் கொஞ்ச,முதிய தம்பதிகள் களிப்புடன் கொண்டாட
காவேரி வந்தாள்!
வாழிய காவேரி!!
வாழிய,வாழியவே!!
(விஜயலக்ஷ்மி கண்ணன் வழக்கறிஞர், கவிஞர், எழுத்தாளர்,பட்டிமன்றப் பேச்சாளர் என பன்முகம் கொண்டவர். வசிப்பது சென்னை அருகே கூடுவாஞ்சேரி)