TVK VIjay Tour: விஜய்யின் அரசியல் சூறாவளி சுற்றுப்பயணம்...ஆகஸ்ட் 15ல் துவக்கம்?

Meenakshi
Jun 25, 2025,05:41 PM IST

சென்னை: ஆகஸ்ட் 15ம் தேதி முதல் தவெக தலைவர் விஜய்யின் அரசியல் சுற்றுப்பயணம் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.


2024ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். கட்சி பெயரை அறிவித்த அன்றே 2026ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் களம் காண்பதே உறுதி என்று தெரிவித்திருந்தார். அதன்பின்னர் தனது கட்சிப்பணிகளை சினிமா பணிகளுக்கு இடைஇடையே செய்து வந்தார்.


அதுமட்டுமின்றி சினிமாவை முழுவதுமாக விட்டு விட்டு தான் அரசியலில் செயல்பட போவதாகவும் தெரிவித்தார். அதன்படி தனது கடைசி படமான ஜனநாயகம் படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு, தற்பொழுது முழு அரசியல்வாதியாக செயல்பட தொடங்கியுள்ளார். இதற்கிடையே கடந்த மாதம் 12 மற்றும் 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி விஜய் கவுரவித்தார். விஜய் கட்சி ஆரம்பித்ததில் இருந்து அரசியல் மேடைகளில் பெரியளவில் தோன்றவில்லை என்பது மற்ற கட்சிகளிடையே பேசு பொருளாக மாறி வருகிறது.




இந்நிலையில், ஆகஸ்ட் 15ம் தேதி முதல் விஜய் அரசியல் சுற்றுப்பயணம் தொடங்க உள்ளதாகவும், முதற்கட்டமாக 100  இடங்களில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்வார்கள் என்றும், இந்த சுற்றுப்பயணம் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து தொடங்கும் என்று தகவல்கள் பரவி வருகின்றன.