கிராமத்து மொழியில் ஒரு கவிதை.. இல்லை பாட்டு.. அட ஜாலியா படிங்களேன்!
- கவிநிலவு சுமதி சிவக்குமார்
ஒரு வீட்டு திண்ணையில் மாலையில் கூடும் வீட்டு தலைவிகளின் அவசரக் கூட்டம்.. இதை கற்பனையாக வைத்து ஒரு ஜாலியான பாட்டு.. வாங்க ரசிக்கலாம்.
அலமேலு :
ராசாத்தி இங்கிட்டு வந்து ஒன் வூட்டு கத சொல்லு. ஆத்தி நாமும் கொஞ்சம் கேட்டு வப்போம்.
ராசாத்தி :
சட்டில கேப்பையத்தான் கரச்சு வச்சு அடுப்புல அதுவுந்தான் சலசலன்னு கொதிக்கயில
அலமேலு :
அப்பொறம் என்னாச்சு டி...!!
ராசாத்தி :
அகப்பையில கிண்டிவிட அங்க அகப்படலேக் கூழெல்லாம்
அலமேலு :
ஐயய்யோ. வேறென்ன பண்ணுண சோத்துக்கு...??
ராசாத்தி :
ஆத்தி...!! வந்தவுக வக்கனையாக் கேட்டாக...!! வவுறாரக் குடிக்கத்தான் வேகமாக் கொண்டு வாடி கூழ...!!
ராசாத்தி கணவர் :
சந்தமிங்கே பாடுதடி சட்டியில சத்தமென்ன கேட்குதடி...!!
அடுப்பிலே காலிப்பானை இங்கியிருக்க கேப்பைக்கூழு எங்கேயடி...??
ராசாத்தி :
நான் எட்டியெட்டிப் பாத்தாக்கா எம்மாபெரிய ஓட்டையுந்தான் பானைக்குள்ள இருக்குதடி...!!
ராசாத்தி கணவர் :
கொல பசியில் வாயுந்தான் காயுதடி வயித்துக்குள்ள ஏதோவொன்னு உருண்டு உருண்டு ஓடுதடி...!!
விட்டேன்னா அறவொன்னு விட்டத்துல ஏறிக்குவ படுபாவி...!!
ராசாத்தி :
அத்தான் என பாத்தப் பார்வையில பதறித்தான் ஓடிபுட்டேன்...!!
அலமேலு :
எங்கண புள்ள....??
ராசாத்தி :
வேறெங்கண என் ஆத்தா வூட்டுக்கு தேங்...!!
சரி வுன் கத என்ன சொல்லு கேட்பம் அக்காவ்...!!
(சுமதி சிவக்குமார்.. B. A., M. com., (co-op mgt)., M. A ., (yoga) ., DOM., (computer)., . கள்ளக்குறிச்சி மாவட்டம் மூஙகில்துறைப்பட்டு என்ற ஊரைச் சேர்ந்தவர். தனது ஊரில் ஏரிக்கு நீர் கொண்டு வர இணையும் கைகள் என்றொரு அமைப்பை ஏற்படுத்தினார் உயர்திரு அப்துல் ரஹீம் அவர்கள். நீர் நிரம்பி இருமுறை கோடி போனது. அதனால் கோமுகி நதியை வாழ்த்தி நடந்தால் வாழீ கோமுகி என்ற கவிதையை பதிவிட்டார் சுமதி சிவக்குமார். முகநூலில் நிறைய கவிதை தளங்களில் கவிதைப் போட்டி நடுவராகவும் கவியரங்கம் தலைவராகவும் திகழ்கிறார். கிட்டத்தட்ட 3000 சான்றிதழ்கள் 50 ஷீல்டுகள் பரிசு பெற்றுள்ளார். நாட்டுப்புற பாடல் எழுதி பாடவும் செய்வார். மதியின் மதி என்ற கவிதை புத்தகம் , தெம்மாங்கு பாடலா என்ற நாட்டுப்புற பாடல்கள் புத்தகம் வெளியிட்டுள்ளார். சின்னசேலம் கண்ணதாசன் கலை இலக்கிய பேரவையின் செயலாளராக செயல்படுகிறார்)