விமர்சனம்

Su.tha Arivalagan
Feb 23, 2026,11:26 AM IST

- க. யாஸ்மின் சிராஜூதீன்


விமர்சனம் ஒரு விளம்பரம் என்றால் .... 

பலமும் பலவீனமும் எடுத்துரைக்கும் என்றால்..... 

அதுவே அதன்

வீழ்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் புகழுக்கும் அச்சாணி என்றால்........ 


அதன் முழுமையும் சிறப்பும்

உழைப்பால் விளைந்தது என்றால்..... 


விடா முயற்சியும் பயிற்சியும்

வளர்ச்சி அளிக்கும் என்றால்......... 




உடலும் மனமும் ஒத்துழைப்பு

தந்தால் என்றால்... 


என்றால் என்று சொல்லுவது எல்லாம் என்றும்  உண்மையும் உயர்வும்

தரும் வெற்றியின் ரகசியம் என்றால்...


என்றாவது ஒரு நாள் கண்டிப்பாக வெற்றிவாகை சூடும் என்றால்... 


எல்லாம் அறிந்தும் உழைக்க தயங்குவது ஏன் என்றாள் ... 


என்றும் கூடவே இருக்கும் மனம் எனும் தேவதை.... 


(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாக  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)