ஒற்றைக் கொம்போனே.. ஓர்கணிக்கு அம்மையப்பனை சுற்றி வந்து பெற்றவனே!

Su.tha Arivalagan
Aug 27, 2025,10:58 AM IST

- கவிஞர் சு. சண்முகம், (சொகோ), புதுப்பேட்டை


ஒற்றைக்கொம்போனே! 

ஓர்கனிக்கு அம்மையப்பனை 

சுற்றி வந்து பெற்றவனே! 

சுப்பிரமணியனை வென்றவனே! 


எழுதுவதற்கு சுழி முதலே! 

எங்கும் நிறைந்திருப்பவனே! 

மூஞ்சுறு வாகனனே!

முச்சந்தியில் வீற்றிருப்பவனே!  

கொழுக்கட்டைப் பிரியனே!

கொடிபுல் அணிவோனே! 




முன் நிற்பவனே 

முழு முதல் ஆனவனே! 

சித்தி புத்தி நாயகனே! 

சிகண்டி கொடிக்கு மூத்தோனே!

தோப்புக்கரணப்பிரியனே! 

தொந்தி பெருத்தோனே! 

தும்பிக்கை  நாயகனே! 

நம்பிக்கை  தருபவனே! 


நானிலம் போற்றுவோனே! 

நாளும் வாழவைப்பவனே! 

முக்கண்ணன்  முதல் மகவே! 

அம்பிகையின் அரும்புதல்வனே! 

போற்றி! போற்றி! 

வினாயகா போற்றி!