அடம் பிடித்த கதை .. விஷாலின் விளையாட்டுகள் (15)
- பா. பானுமதி
அன்று ஒரு நாள் பள்ளிக்குச் செல்லும்போது காலையில் பேட் வேண்டும் என்று விஷால் ஒரே அழுகை.
சரி என்று அருகில் உள்ள கடைக்கு அழைத்துச் சென்று அவனுக்கு தேவையான பேட்பாலும் வாங்கி கொடுத்தேன்.
அது 20 ரூபாய் தான். எனக்கு விலை தெரியும் என்பதால் முதலில் 20 ரூபாய் எடுத்து அவன் கையில் கொடுத்து விட்டேன். அவன் உயரத்தில் இருந்த அந்த பந்தை காட்டி அந்த நிறம் தான் வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தேன். விஷால் காசு கொடுத்து விடு என்று அவனிடம் சொல்லி விட்டேன். வந்து வாங்கியவுடன் வேகமாக பேருந்துக்குச் சென்று ஏறி பள்ளிக்கு சென்று விட்டோம்.
விஷால் பள்ளிக்கு வராமல் ஒரே பிடிவாதம் வேண்டுமென்றே வரமாட்டேன் வரமாட்டேன் என்று அந்த இடத்திலேயே நின்று கொண்டு அடம் பிடித்தான். அவனை விரட்டிக் கொண்டு சத்தம் போட்டு பேருந்தில் அழைத்துச் சென்றேன். பேருந்தில் அமர்ந்த பின்பு தான் தெரிந்தது. நான் கொடுத்த காசு விஷாலின் கையில் அப்படியே இருந்தது காசு கடைக்காரரிடம் கொடுக்கவில்லை .
கொடுக்காமல் செல்கிறோமே என்று நினைத்து தான் அவன் வராமல் அங்கே நின்று அடம்பிடித்து இருக்கிறான். அதன்பின் மாலை அப்படியே செல்லும்போது கடைக்காரரிடம் விவரம் சொல்லிவிட்டு கொடுத்துவிட்டு சென்றோம். காசு கொடுத்த பின்பு கடைக்காரரை பார்த்து விஷால் சிரித்து காட்டினான்.
பிள்ளை மொழி மிக எளிதானது. நேர்மையானது கலப்படமில்லாதது. தூய்மையான மொழியை நாம் புரிந்து கொள்ள சற்று நிதானமாக இருந்தாலே போதும்.
விஷாலின் விளையாட்டுகள் தொடரும்
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)