காவேரிக் கரை இருக்கு.. கரை மேலே பூவிருக்கு.. பாடலுக்கான பரிசு.. விஷாலின் விளையாட்டு (8)

Su.tha Arivalagan
Apr 08, 2026,11:48 AM IST

- பா.பானுமதி


விஷாலுக்கு ஐந்து வயது முடிந்து முதல் வகுப்பில் சேர்க்கப்பட்டு விட்டான்.


வாய் திறந்து ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. முதல் வகுப்பு முடியக்கூடிய காலம் வந்துவிட்டது. 


ஒரு நாள் வீட்டில் பழைய பாடல் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்தது. காவேரி கரையிருக்கு கரை மேலே பூவிருக்கு என்று எம்ஜிஆர் சரோஜாதேவி பாடிய பாடல் .


அந்த பாடலை பார்த்துக் கொண்டே இருந்தான். மறுநாள் காலை பள்ளிக்குச் செல்லும்போது அந்த பாடலை மெதுவாக பாடிக்கொண்டிருந்தான். அவன் அம்மாவிற்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.


பள்ளிக்குச் சென்றதும் மதிய உணவு இடைவேளையில் தலைமையாசிரியரிடம் அதைப் பற்றி கூறினார். உடனே தலைமையாசிரியர் விஷாலை வரச் சொல்லி அந்தப் பாடலை பாடுமாறு கேட்டு... விஷால் பாடவில்லை .




சரி நீ எனக்கு பாட மாட்டாய் என்று அவர்கள் வருத்தமுடன் சொல்ல அவர்கள் எதிர்பாராத வேளையில் காவேரி கரை இருக்கு என்று பாடத் தொடங்கினான் . இடையில் சற்று நிறுத்த அதை தொடர்ந்து தலைமை ஆசிரியை பாடினார். 

என்னமோ போலிருக்கு...


விஷால்: எப்படியோ மனசு இருக்கு .  வெட்கம் தான் தடுத்து இருக்கு ஆசைக்கு வெட்கமில்லை அறிந்த பின்னே தூக்கம் இல்லை என்று தொடர்ந்து பாடிக் கொண்டே போனான். மாலை தேடி வரும் மங்கை என்ற பெயர் மனைவி என்று மாறிவரும் என்று தொடர்ந்து பாட அனைவரும் ஆச்சரியத்தில் வாயடைத்து நின்று பார்த்துக் கொண்டிருந்தனர் 


உடனே தலைமையாசிரியர் டேய் உன் மாமா கூட என்னை பார்த்து இப்படி எல்லாம் பாடியதில்லை. என் மருமகனே நீ பாடி விட்டாய் என்று மிகுந்த சந்தோஷத்தில் விஷாலுக்கு ஐஸ்கிரீம் வாங்கி வந்து தந்தார். 


அதன்பின் விஷாலின் பாடல் ஆர்வம் அதிகமானது. அவன் அம்மா அவன் சிறு குழந்தையாக இருக்கும்போது தூங்க வைப்பதற்காக பாடிய பாடல்கள் அனைத்தும் தற்போது முழுவதுமாக பாடிக் காட்டினான். 


சான்றாக அத்தை மடி மெத்தை அடி...


என்ன பலமுறை வேண்டி கேட்டால் தான் பாடுவான் 


விஷாலின் பரிசு படலம் தொடரும்


(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)