திருநீற்றின் மகிமை .. விஷால் விளையாட்டுக்கள் (18)

Su.tha Arivalagan
May 16, 2026,11:40 AM IST

- பா. பானுமதி


விஷால் சிறு பிள்ளையாக இருக்கும்போது இரவு நேரங்களில் தூங்கவே மாட்டான். தூக்கம் வராமல் என்னையும் தூங்க விட மாட்டான்.


சில நேரங்களில் அழுகையான அழுகை எழுந்து உட்கார்ந்து கொண்டு அழுது கொண்டே இருப்பான். 


வெளியே கூட்டிக் கொண்டு செல்ல சொல்வான். நடு இரவில் இதெல்லாம் சாத்தியமில்லை என்பதால் அவனை பல வகைகளில் சமாதானப்படுத்துவேன்.


சில நேரம் ரொம்ப அழுதால் பூஜை அறைக்கு சென்று இறைவனை வணங்கி விட்டு எனக்கு தெரிந்த ஸ்லோகங்களை சொல்லுவேன். 


ஒருநாள் இரவு நான் மழையில் நனைந்து விட்டதால் எனக்கு இரவு முழுவதும் மூச்சிரைத்தது. தூங்க முடியவில்லை. நான் எழுந்து அமர்ந்து கொண்டிருந்தேன். கண்ணில் லேசாக கண்ணீர் வந்து கொண்டே இருந்தது  


தூங்கிக் கொண்டிருந்த விஷால் எழுந்து விட்டான். என்னை பார்த்ததும் என்னருகில் வந்து என் கண்களை துடைத்து விட்டான். என்னை படுக்கச் சொல்ல என்னால் படுக்க முடியவில்லை. 




உடனே வேகமாக பூஜை அறைக்குச் சென்று அங்கு நின்று அவன் நாராயண காயத்ரி சொல்லிவிட்டு திருநீரைக் கொண்டு வந்து என் நெற்றி நிறைய பூசி விட்டான். என் கைகளில் நெஞ்சில் எல்லாம் திருநீறு பூசி விட்டு சுக்லாம் பரதம் சொல்ல ஆரம்பித்துவிட்டான். 


அதை கண்டதும் ஆனந்தத்தில் எனக்கு மூச்சு விடுதலும் சீராகிவிட்டது. ஆனந்த கண்ணீரில் அப்படியே தூங்கி விட்டேன். 


திருநீருக்கு மகிமை இருக்கிறது 


விஷால் விளையாட்டு தொடரும்


(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)