பெருந்தன்மையின் பொருள்.. விஷால் விளையாட்டுக்கள் (19)

Su.tha Arivalagan
May 18, 2026,12:38 PM IST

- பா.பானுமதி


ஒரு நாள் மாலை நானும் விஷாலும் பூங்காவிற்கு சென்றோம். 


மாலை வேளை பள்ளி விடுமுறை எனவே பிள்ளைகள் கூடி கொண்டாட்டமாய் இருந்தார்கள். 


ஊஞ்சல் சீசா ஏற்றம் இறக்கம் வட்டமாய் சுற்றுதல் தொங்குதல் வழுக்குதல் என எல்லா இடத்திலும் பிள்ளைகளின் கூட்டம். 


ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டே வந்த விஷால் ஊஞ்சலை கை காட்ட அங்கு அழைத்துச் சென்றேன். அங்கு ஆடிக் கொண்டிருந்த பெண் நாங்கள் நின்றிருப்பதை பார்த்தாள். இருந்தாலும் ஊஞ்சலை விட்டு இறங்காமல் ஆசையுடன் ஆடிக் கொண்டே இருந்தாள்.


சிறிது நேரம் கழித்து இறங்கியவுடன் விஷால் அந்த ஊஞ்சலில் அமர்ந்து ஆடினான். அப்போது மற்றொரு சிறுவன் தன் தந்தையுடன் வந்து அங்க நிற்க உடனே விஷால் கீழே இறங்கி வந்து விட்டான். 


அந்தப் பையனின் தந்தையும் சிறிது நேரம் விளையாடு தம்பி, நீ இவ்வளவு நேரம் காத்திருந்தாயே என்று சொல்லியும் கேட்காமல் அவனுக்கு இடம் கொடுத்து விட்டு வந்து விட்டான்.




இது போன்று வழுக்குதல் ஏறி இறங்குவது போன்ற இடங்களில் பிள்ளைகள் வந்தவுடன் அவர்களுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு விஷால் வந்து விட்டான். 


நேராக வீட்டுக்கு போகலாம் என்று வாசலில் என்னை கையைப் பிடித்து அழைத்து வந்து விட்டான் . இப்பிள்ளையின் பெருந்தன்மை என்னை மிகவும் நெகிழ்த்தியது.  தொலைவில் இவன் இடம் கொடுத்த அனைவரும் அங்கிருந்து விஷாலை பார்த்து கையை ஆட்டினார்கள். 


விட்டுக் கொடுப்பதை விரும்பிய பிள்ளை. 


(விஷாலின் விளையாட்டுகள் தொடரும்)


(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)