விஷால் விசிலும்.. விஷாலின் விளையாட்டுகள் 7
- பா. பானுமதி
ஒருமுறை சென்னை சென்று இருந்தபோது சரியான பேருந்தில் கூட்டம் அந்தப் பேருந்து அமைஞ்சகரையில் இருந்து அண்ணா நகர் செல்லக்கூடிய பேருந்து
செனாய் நகர் தாண்டியதும் ஒரு பெண் தன் இறங்க வேண்டிய ஸ்டாப் சென்றுவிட்டது. சற்று நிறுத்துங்கள் இறங்கி கொள்கிறேன் என்றும் மன்றாடினாள்.
அதற்கு நடத்துனர் சத்தம் போட ஆரம்பித்து விட்டார் அங்கே இருந்தவர்கள் ஆளாளுக்கு அவர்களுக்கு தெரிந்த ஒன்றே பேச ஆரம்பித்து விட்டனர்.
"ஏம்மா படிச்ச பிள்ளையா இருக்கே பார்த்து இறங்குறது இல்லையா "
"என்னம்மா இவ்ளோ நேரம் தூங்கிட்டு இருந்தியா இப்ப பாரு "
"பாவம் அந்த பொண்ணு கொஞ்சம் நிறுத்துங்களேன் இறங்கிடும் "
"இப்படி நிறுத்திக்கிட்டே இருந்தா நாங்க எல்லாம் எப்ப போய் அலுவலகம் சேர்வது "
" என்னமா போய் வாசப்படி கிட்ட நில்லு நிறுத்தினால் டக்குனு இறங்கிடலாம் "
"அம்மா டிக்கெட் வாங்கினாயாமா என்று நடத்துனர் மேலும் சத்தம் போட ஆரம்பித்து விட்டார் "
இதற்குள் மெல்ல மெல்ல சிந்தாமணி ஸ்டாப்பே வந்து விட்டது. விஷாலும் அவனுடைய அம்மாவும் ஓட்டுனருக்கு அருகில் உள்ள சீட்டில் அமர்ந்திருந்தனர். இந்த உரையாடல்களின் பொருள் விளங்காத விஷால் வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தவன் திடீரென்று தன்னுடைய சட்டை பாக்கெட்டில் இருந்த விசிலை எடுத்து வேகமாக ஊதி விட்டான்.
அவ்வளவுதான் பேருந்து நின்று விட அந்தப் பெண் சட்டை கீழே இறங்கி விட்டாள் யாரது விசில் ஊதியது என்று நடத்துனர் சத்தம் போட அங்கிருந்த சில பேர் விஷால் விஸில் ஊதியத்தை பார்த்தாலும் யாரும் வாய் திறக்கவில்லை.
விஷாலின் அம்மா சட்டென்று அந்த விசில் எடுத்து சட்டை பாக்கெட் போட்டு கையை மூடிவிட்டார் இல்லை எனில் நடத்தினரிடம் யார் திட்டு வாங்குவது. இதில் ஓட்டுநர் வேறு சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறார் கண்ட இடத்தில் விசிலை ஊதி வண்டியை நிறுத்துவது எப்போதுதான் போய் சேர்வது வண்டி ரொம்ப தாமதமாக ஆயிட்டுது
அடுத்த நிறுத்த மாறாதும் விஷாலும் அவனுடைய அம்மாவும் கீழே இறங்கி சாலையை கடந்து செல்ல மறுபடி தன்னுடைய சட்டையில் இருந்து விசிலை எடுத்து விஷால் ஊதி விட்டான்.
வண்டியில் இருந்து அதைப் பார்த்த ஓட்டுனருக்கு விஷயம் விளங்கி விட்டது மெல்ல சிரித்துக் கொண்டார் எதை நினைத்து சிரித்தாரோ தெரியவில்லை.
நாங்கள் கண்டு கொள்ளாமல் சென்று விட்டோம் விஷாலின் விசில் சத்தம் ஒரு பெண்க்கு உதவியது .
(தொடரும்)
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)