வெங்கிரணங்களால் உலகோரை.. ஆசீர்வதித்து உலாச் சுற்ற புறப்பட்டான் சூரியன்!
Jan 16, 2026,02:07 PM IST
- வே.ர. விஜயலக்ஷ்மி
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல் என்று
வெண் மேகங்கள் ஒன்று கூடிச் சூரியனைச் சுற்றி வர...
கருமேகங்கள் திரண்டு வந்து கதிரவனைக் கண்டு களித்து ...
உள்ளத்தில் உவகையுற்று..
தம்முள் புதைந்துள்ள ஈரப்பன்னீரைத் தெளித்து வரவேற்க...
பொழுது புலர்கின்ற பொன்னான வேளையிலே
பம்பரமாய் கீழ் வானத்தின் சிவப்பினிலே சென்னீராடி
தம் கடமையை களிப்பாய் உவப்பாய்
கண்ணியமாய்ச் செய்து முடித்திடவே...
மெது மெதுவாய் மேல் சென்று கள்ளம் கபடமில்லாக் கிரணங்களை
புவி மீது ஊடுருவி
தைத்திங்கள் நாளின் பூரிப்பையும் நன்றியையும் ஏற்று
தமது வெங்கிரணங்களால் உலகோரை
ஆசீர்வதித்து உலாச் சுற்ற புறப்பட்டான்!
(வி.ஆர்.விஜயலக்ஷ்மி, ஆங்கில பட்டதாரி ஆசிரியை, காஞ்சிபுரம் மாவட்டம்)