Happy Easter.. உயிர்த்தெழுந்தார் எம் தேவன்!
- வே.ர.விஜயலட்சுமி
உலக உயிர்கள் இன்புற்று வாழ்வே
தன்னுயிர் ஈந்தார் அன்பு என்னும் அறவழி நின்று
இரக்கம் காட்டி மனிதருக்கு மனிதர் அபிமானம் கொண்டு
தவறுக்கு மன்னித்து விதண்டாவாதம் புரியாமல்
விட்டுக்கொடுத்து வாழ வழியற்று இருப்போருக்கு வழிகாட்டி
பசித்திருப்போருக்கு பாசமாய் உணவளித்து
பிறர் துன்பமதனை தனது என எண்ணி காப்போர்
தேவனுடைய குழந்தைகளே!!!!
வாழ்ந்து காட்டியுள்ளார் எம் தேவன்!!!!!
மனித குலத்துக்கு தனது உதிரத்தை தானமாக்கினார்.....
இன்னுயிரை தரும் முன்னர் அவர் பட்ட பாடுகள் எத்துணை ?எத்துணை?
தம் சிலுவையை தாமே சுமந்து முட் கிரீடம் தாங்கி சாட்டையடி பெற்று
கயவர் கூட்டத்தால் கள்வரோடு சிலுவையில் அறையப்பட்டு
மாண்டார் எங்கள் இயேசுபிரான்....
நெஞ்சு பொறுக்குதில்லையே.. நிலைத்திரிந்த அசுர மனம் கொண்டோரை நினைத்துவிட்டால்.....
மனிதரது உதிரத்தால் கழுவி பாபவிமோசனம் அருளிய ஆண்டவரே!!!
எம் இதயத் தேவனே!!!!
உமது சிறகுகளுக்குள் எமக்கு நல் அடைக்கலம் தாருமைய்யா!!!!
கண்ணிருந்தும் குருடராய் வாழ்ந்திடும் எங்களுக்கு நல் வழி அருளி ஆசிகள் அருளும் அய்யா!!!!!
(V.R. VIJAYALAKSHMI,GRADUATE TEACHER, KANCHIPURAM DISTRICT TAMILNADU, INDIA )