காஷ்மீர் ஆப்பிள் தெரியும்.. அது என்ன வாட்டர் ஆப்பிள்( Water Apple)?.. வாங்க சாப்பிடலாம்!
வாட்டர் ஆப்பிள் .. பன்னீர் நாவல் என்று அழைக்கப்படும் இந்த நீர் ஆப்பிள், மணியை போன்ற வடிவம் கொண்டது. இந்த பழம் கிடைத்தால் கட்டாயம் சாப்பிடுங்கள். இந்த கோடை வெயிலுக்கு மிகவும் நன்மை பயக்கும்.
"எதை தின்னா பித்தம் தெளியும் "என்று கூறுவார்கள் ஆனால் இந்த கோடை வெயிலுக்கு எதை சாப்பிட்டால் நமக்கு உடலுக்கு குளிர்ச்சி கிடைக்கும் என்று ஒவ்வொருவரும் இளநீர் நுங்கு போன்றவற்றை உண்டு நம்மை பாதுகாத்துக் கொள்ள நினைக்கிறோம் இல்லையா?...
நீர் ஆப்பிள் பற்றிய தகவல்கள் தான் இந்த கட்டுரையில் பார்க்க போகிறோம் .இதன் அறிவியல் பெயர் 'சைஸ் சிஜிஎம் அக்யூம்".. இது தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் இந்தியாவின் சில வெப்ப மண்டல பகுதிகளை பூர்வீகமாகக் கொண்டுள்ளது இந்த வாட்டர் ஆப்பிள்.
இந்த வாட்டர் ஆப்பிள் எப்படி பிற மொழிகளில் அழைக்கப்படுகிறது தெரியுமா?
தமிழில் 'ஜம்பு 'அல்லது 'பன்னீர் நாவல் 'என்றும். தெலுங்கில் 'குலாபி ஜாமி காயலு 'என்றும் 'குலாபிஜாமீ செட்டு' என்றும் அழைக்கப்படுகிறது. ஹிந்தியில் 'சம்பக்கா' என்றும் 'பனி செப் 'என்றும் அழைக்கப்படுகிறது. மலையாளத்தில் 'ஜம்பக்கா 'என்றும் அழைக்கப்படுகிறது. இதுதவிர பிளம் ரோஸ், ரோஸ் ஆப்பிள், மலபார் ஆப்பிள் என்றும் அழைக்கப்படுகிறது.
சிறப்புக்கள்: இந்த வாட்டர் ஆப்பிள் சிறியதாகவும் அதன் வடிவம் மணியை ஒத்திருக்கும். இந்த வாட்டர் ஆப்பிள் சுவையான சதைப்பற்றுள்ள பழமாகும். இது ஒரு வெப்பமண்டல பேரிக்காய். இப்பழம் லேசான ரோஜா வாசனையை கொண்டுள்ளது. இது இனிப்பு மற்றும் புளிப்பு சுவையுடைய பழம் .இது மலேசியா ,தாய்லாந்து மற்றும் இந்தியாவில் வளர்க்கப்படுகிறது .இது ஒரு சத்தான பழம் .இதன் சுவை ஆப்பிள் ,மற்றும் கொய்யா பழங்களின் சுவையை கலந்த ஒரு வித்தியாசமான ருசியை கொண்டுள்ளது. இந்த கோடை வெயிலுக்கு அருமையான நீர்ச்சத்து நிறைந்த பழம்.
நீர்ச்சத்து: 90% நீர்ச்சத்து உள்ளதால் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. குறிப்பாக வெப்பமான கோடை காலங்களில் கத்திரி வெயிலுக்கு கிடைக்கும் இடங்களில் இதை தவறவிடாமல் சாப்பிடுங்கள்.
ஊட்டச்சத்துக்கள்: இதில் வைட்டமின் சி ,ஏ, பி 1 ,பி 3, இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
மருத்துவ குணங்கள்: இது செல்கள் சேதத்தை தடுக்கும் .நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தசைகளை பலப்படுத்தும். இத்தனை மருத்துவ குணங்கள் கொண்டுள்ளது இந்த நீர் ஆப்பிள்.
இதனை எப்படி சாப்பிடலாம்?
பழத்தை நன்றாக கழுவி அப்படியே தோலுடனையே சாப்பிடலாம். அல்லது ஜூஸ் போட்டு குடிக்கலாம், சாஸ், ஸ்மூதி போன்றவற்றுக்கு பயன்படுத்தலாம்.
மேலும் இதுபோன்ற பழ ரெசிபிகளுக்கும், சுவாரசியமான தகவல்களுக்கும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். உங்கள் ஸ்வர்ணலட்சுமி.