Middle East tension: பதட்டத்தில் மத்திய கிழக்கு.. பரபரக்கும் உறவுகளும், நட்பும்.. அக்கறைக்கு நன்றி
- தெ.நாராயண லெட்சுமி, B.E
சமீப நாட்களாக மத்திய கிழக்கு பகுதியில், குறிப்பாக United Arab Emirates மற்றும் Iran தொடர்பான பதற்ற நிலைமைகள் குறித்து பல்வேறு செய்திகளும், சமூக ஊடக தகவல்களும் பரவி வருகின்றன.
அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருவதால், பொதுமக்கள் அமைதியாகவும் விழிப்புடன் இருப்பது அவசியமாகியுள்ளது.
இந்த சூழ்நிலையில்,இந்தியாவில் இருக்கும் நண்பர்கள், உறவினர்கள் தொடர்ந்து கால்ஸ், மெசேஜ்கள் பண்ணி “சேஃப்டியா இருக்கீங்களா?” என்று கேட்டுக் கவலைப்பட்டு, பிரார்த்தனை செய்து வருவது மனசுக்கு பெரிய தைரியம் தருது.
இந்த அக்கறைக்கும் அன்புக்கும் மனமார்ந்த நன்றி.
நேரம் எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும், நம்மள நினைச்சு ஒரு மெசேஜ் அனுப்புறது கூட பெரிய ஆதரவு தான்.
சரி நீங்க வெளிநாட்டில் குறிப்பாக மத்திய கிழக்கில் இருக்கீங்களா.. இதை மனசுல வச்சுக்கங்க..
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை
• அதிகாரப்பூர்வ அரசு அறிவிப்புகள் மற்றும் நம்பகமான செய்தி மூலங்களை மட்டும் பின்பற்றவும்.
• சரிபார்க்காத தகவல்களை ஃபார்வர்ட் பண்ணாதீர்கள்.
• அவசர எண்கள் மற்றும் எம்பஸி தகவல்களை சேமித்து வைத்திருக்கவும்.
• தேவையற்ற வெளியே செல்லும் பயணங்களை தவிர்க்கவும்.
• குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்து நிலைமையை பகிர்ந்து கொள்ளவும்.
நம்ம எல்லாருக்கும் பாதுகாப்பு முக்கியம். அமைதியாக, விழிப்புடன் இருந்தால் எந்த சூழ்நிலையையும் சமாளிக்கலாம்.
அன்பாக நினைச்சு கவலைப்பட்டு கேட்ட எல்லாருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி.. இதுவும் கடந்து போகும்!
(தெ. நாராயணலட்சுமி, ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமாவில் வசித்து வருகிறார்)