ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை.. உரியபடி கண்டறிந்தால்.. வாழ்வில் எளிதாக ஜெயிக்கலாம்!

Su.tha Arivalagan
Oct 24, 2025,04:55 PM IST

என் பெயர் தங்கப்பிரியா. நான் பி.ஏ ஆங்கில இலக்கியம் படித்துள்ளேன். எனது பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் நான் மேடை ஏறிய தருணங்கள் சிறிதளவு தான். எனக்குள்ளே திறமை இருந்தாலும் பயம் அதை விட அதிகமாக இருக்கும். ஆனாலும் எனக்கான பாதையை கல்லூரியில் உருவாக்கினேன். வெவ்வேறு கல்லூரிகளுக்கு சென்று ஏதாவது ஒரு நாவல், சிறுகதை பற்றி மேடையில் பேசினேன். அது எனக்கு ஒரு ஊக்கமாக இருந்தாலும் இன்று வரை எனக்குள் இருக்கும் திறமைகளை வாழ்க்கையில் வெளிக்கொண்டு வர இயலவில்லை.


"அனைவரும் தன் தனித்திறமையை வாழ்வில் கண்டறிந்து அதில் வெற்றி நாம் வாழ்வில் எளிதாக ஜெயித்து விடலாம்."


எனக்கு திருமணம் முடிந்து சற்று காலங்கள் ஓடின. திருவாசகம் முழுமையாக எழுதி முடித்தால் சான்றிதழ் தரப்படும் என சிவக்குமார் ஐயா அறிவித்து இருந்தார். அவர்கள் குரூப்பில் சேர்ந்தேன். மனம் குளிர திருவாசகம் எழுத தொடங்கி 25 நாட்களில் எழுதி முடித்தேன். திருவாசக மாநாடு எங்கள் சிவக்குமார் ஐயா மற்றும் ரத்னா அம்மா தலைமையில் மிக பிரம்மாண்டமாக திருவண்ணாமலையில் நடந்தது. எனது கைகளால் திருவாசகம் எழுதியது என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த வரம். திருவாசகம் எழுதும் நிகழ்வு மட்டும் தான் என்று பார்த்தால், அங்கே ஒரு அறிவு களஞ்சியமே இருந்தது. அதன் அழகான பெயர் தான் "தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம், திருவண்ணாமலை ".


"தடம் பதிக்கும் தளிர்கள் என் வாழ்க்கையின் விதைகள் நான் இன்று மரமாக வளர்ந்து விட்டேன் ".




அந்த குழுவில் நம் திறமைகளை வெளிப்படுத்தலாம். ஓவியம், நடனம், பாடல், கவிதை, தமிழ் நூல்கள் எழுதுதல், போன்ற பல நிகழ்வுகளில் கலந்து கொண்டு சான்றிதழ்கள் பெற்றேன். இப்படி நிகழ்வுகளில் பங்கேற்று கொண்டிருக்கும் போது என் திறமைகளை இன்னும் வளர்ப்பதற்கு விவேகானந்தா அகாடமி மூலம் ஓராண்டு இலவச பயிற்சி வழங்கி சான்றிதழ் அளிப்பார்கள் என்பது வியக்கத்தக்க விஷயமாக இருந்தது. அந்த குழுவில் இருக்கும் ஒருங்கிணைப்பாளர்கள் பொறுமையானவர்கள், அன்பிற்கு அடையாள மானவர்கள். அவர்கள் அனைவரும் திருமணம் முடித்த பெண்கள். தங்கள் வீட்டு வேலைகள், குழந்தைகளையும் பார்த்து,இந்த குழுவையும் வெற்றிகரமாக நடத்தி கொண்டு இருக்கிறார்கள்.அவர்களே இணைய வழியில் மருத்துவம், நடனம், கைவினை பொருட்கள் செய்வது, அறிவியல்,பொதுஅறிவு போன்ற அனைத்து கலைகளையும் கற்றுத் தர இருக்கிறார்கள்.


நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ,என் திறமைகளை வெளிப்படுத்தி நிறைய சான்றிதழ்களும் பெற்றேன். இப்படி மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த தருணத்தில், கடவுள் என் குழுவிற்கு அளித்த பரிசு "தென் தமிழ" என்ற அழகான இணைய நாளிதழ். எங்களுக்குள்ளேயே திறமைகளை வெளிப்படுத்தி சான்றிதழ்கள் போட்டு கொண்டிருந்த நேரத்தில், அந்த திறமைகளை உலகத்திற்கு காட்ட வந்தது "தென்தமிழ்".


பெண்களின் திறமை சமயலறையில் போய்விடக்கூடாது,வெளியே கொண்டு வர வேண்டும் என்ற முயற்சியில் ,நம் தாய்மொழி தமிழை பேணிக்காப்பவர்கள் தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் , திருவண்ணாமலை மற்றும் தென்தமிழ் இணையதளம், சென்னை. மக்கள் திறமையின் ஆணிவேர்கள் பெண்களின் முன்னேற்றத்தின் ஆயுதங்கள். நம் வாழ்வை ஒளிரச் செய்யும் தீபங்கள்.

இது போன்ற உறவுகள் இருக்கும் வரை கலங்காது நம் கண்கள். ஆனந்தத்தில் நம் கண்கள் கலங்கினால் கூட ,அதை துடைக்கும் கரங்கள் இருக்க பயமேன். இந்த உலகமே ஒளி வீசட்டும், நம்  தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம், திருவண்ணாமலை 

தென்தமிழ் நாளிதழ் என்ற இரு கரங்களால்.


(விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த தங்கப்பிரியா, ஒரு பட்டதாரி. திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார்)