மனமாற்றம் வேண்டும்!!
- தமிழ்மாமணி கவிஞர் இரா. கலைச்செல்வி
நல்ல மன மாற்றம் வேண்டும்.. இவர்களுக்கு..!!
யார் அவர்கள்??
வீண் கதைபேசி பிறரை காயப்படுத்துவோர்க்கு
உழைப்பின் மேன்மையை உணராதவர்களுக்கு
உணவு கொடுக்கும் உழவர்களை மதிக்காதோருக்கு
குடும்ப வேலைகளை பகிர்ந்து கொள்ளாத ஆண்களுக்கு
குழந்தைகளிடம் நேரம் செலவழிக்காத பெற்றோருக்கு
குடித்துவிட்டு பெண்களை அடக்கும் ஆண்களுக்கு
வயதான பெற்றோரை மதிக்காத பிள்ளைகளுக்கு
மாசற்ற மனைவியின் மகத்துவம் அறியாதவனுக்கு
பாலியல் வன்கொடுமை செய்யும் மிருகங்களுக்கு
கோடி கோடியாய் சொத்து சேர்க்கும் பண முதலைகளுக்கு
காசுக்காக போதை பொருள் கடத்தும் அரக்கர்களுக்கு
போதை மருந்துக்கு அடிமையாகும் இளைஞர்களுக்கு
மண்ணை மலடாக்கும் நெகிழியை பயன்படுத்துவோருக்கு
மதத்தின் பெயரால் கலவரத்தில் ஈடுபடும் கயவர்களுக்கு
ஜாதியின்பேரில் ஆணவ படுகொலை செய்யும் மிருகங்களுக்கு
ஓட்டு போட்ட மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளுக்கு
தேர்தலின் போது மட்டும் காசை கரியாக்கும் கள்வர்களுக்கு
அப்பாவி ஜனங்களை கொன்று குவிக்கும் ஆணவ நாடுகளுக்கு
மனமாற்றம் வந்தால் தான் உலகம் சுபிட்சம் அடையும்.
மனித வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் கிட்டும்.
(எழுத்தாளர் பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சாதனைப் பெண், தங்கத் தாரகை, கவிஞாயிறு உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்).