மதுரையின் வளர்ச்சிக்கு போடப்படும் தடைக்கற்களை தகர்த்தெரிவோம்:முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு!
சென்னை: தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகராகத் திகழும் மாமதுரையின் வருங்கால வளர்ச்சிக்கு எதிராகப் போடப்படும் தடைக்கற்களைத் தகர்த்தெறிவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கோவை மற்றும் மதுரை மாவட்டங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான அனுமதி கோரி தமிழக அரசு விரிவான திட்ட அறிக்கைகளை மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது. கோவை, மதுரை நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டி வருகிறார்.
இந்நிலையில், இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தள பதவில்,
AIIMS-உம் வராது, MetroRail-ஐயும் வரவிட மாட்டோம் என மதுரையை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராகக் கூடல்நகரில் கூடிய நம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர்.
அனைத்து வழிகளிலும் போராட்டத்தை முன்னெடுத்து, தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகராகத் திகழும் மாமதுரையின் வருங்கால வளர்ச்சிக்கு எதிராகப் போடப்படும் தடைக்கற்களைத் தகர்த்தெறிவோம்! என்று தெரிவித்துள்ளார்.