வருக வருக.. தை மகளே வருக..!
Jan 15, 2026,03:15 PM IST
- கலைவாணி ராமு
வருக வருக
தை மகளே வருக ......
தருக தருக
தனங்கள் பல தருக.....
உயர்க உயர்க
உழவர் பெருமை உயர்க....
மணக்க மணக்க
பொங்கல் வாசம் மணக்க..
தை
பிறந்ததால் தரித்திரம் போகும்....
சிறப்புகள் கூடும்....
ஆனந்தத்...தை ஆரோக்கியத்....தை
நேசத்....தை
கூட்டி
வஞ்சத்...தை துரோகத்...தை வன்மத்...தை ஆணவத்...தை கோபத்...தை சுயநலத்...தை
கழித்து
பந்தத்...தை பாசத்...தை வளத்...தை
பெருக்கி பழையனவற்றைக்
கழித்து...
புதிய எண்ணங்களை ....
கூட்டி
தை மகளை வரவேற்போம்.....
சூரியனுக்கு ஒரு நாள் பொங்கல்.... சூரிய பொங்கல்....
உழவுக்கு உதவும் காளைக்கும் பசுவுக்கும் ஓரு பொங்கல்....
காணும் பொங்கல்.... இறைவனுக்கு நன்றி தெரிவிக்க ஒரு பொங்கல்
கொண்டாடி மகிழ்வோம் இனிமையாக பொங்கலோ....
பொங்கல்... பொங்கலோ.... பொங்கல்....
மகிழ்ச்சி பொங்கல்....
ஆனந்த பொங்கல்!