2026 வருடமே வருக!

Su.tha Arivalagan
Jan 02, 2026,10:53 AM IST

- கவிதா உடையப்பன்


நேற்றைய நிமித்தங்கள் 

நினைவில் இருக்க,

இன்றைய பொழுது 

இதயத்தில் நிற்க...


முடிவுரை இல்லா 

முத்தான வாழ்வில்,

முன்னுரைகள் அவ்வப்போது 

முளைத்து எழ..




புது பொலிவுடன், 

புதிய பணியுடன்,

கோடி துணிவுடன்,

கோடிட்ட குறிக்கோளுடன்..


சென்றவை பாடமாய்,

வென்றவை உதாரணமாய், 

நாமே கலங்கரை விளக்கமாய்,

நாணயமே இலக்காய்..


நேர்மை பெருக, 

நிம்மதி நிலைபெற, 

நெறியும் நீதியும்

நெடுந்தூரம் இட்டுச் செல்ல.. 


2026

சுகமான வருடமாய், 

சூரிய குடும்பங்களில் 

சூட்சுமத்தை வீசட்டும்!


(சேலத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர் உடையப்பன் ரத்தினா செல்வகுமார் தலைமையிலான திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவர். தன்னம்பிக்கை பேச்சாளரும் கூட)