முத்தம் என்பது எதன் வெளிப்பாடு!
Feb 13, 2026,12:51 PM IST
- ஷீலா ராஜன்
முத்தமென்பது மோகத்தின் வெளிப்பாடா!
அன்பின் வெளிப்பாடா!
ஆசையின் வெளிப்பாடா!
ஆதரவின் வெளிப்பாடா!
அரவணைப்பின் வெளிப்பாடா!
காமத்தின் வெளிப்பாடா!
காதலின் வெளிப்பாடா!
துக்கத்தின் வெளிப்பாடா!
எப்படியாயினும் முத்தமென்பது
மொத்தத்தில் சுகமானது
அன்னையிடமிருந்து
தந்தையிடம் இருந்து
கணவனிடம் இருந்து
மனைவியிடம் இருந்து
உடன் பிறந்தவரிடம் இருந்து
உறவினரிடம் இருந்து
ஆசானிடமிருந்து
நண்பர்களிடமிருந்து
பொய்யாக மெய்யாக ஆக
எங்கன மாயினும் முத்தம் மொத்தத்தில்
அன்பின் வெளிப்பாடு தான்.....
அளிப்பவர்களுக்கும்
அணிந்து கொள்பவர்களுக்கும் .....
முத்தம் மறைபொருள்
அரசியல்வாதிகளுக்கும்
ஆன்மீகவாதிகளுக்கும் ஆயுதம்
நாடகம் ஆடுவோருக்கு கருவி
மொத்தத்தில் எண்ணங்களின் உயிர்ப்புதான்
முத்தம்!