ரதி ...நேரா மதன்கிட்டே கேட்டு விடு.. அவளின் (ல்) அவன்! (17)
- ரதிதேவி
நீங்கள் யாரென்று தெரியாது.. என்ன வேண்டும் உங்களுக்கு..
நேற்று நான் உங்களை அவருடன் ஹோட்டலில் பார்த்தேன்... அதுக்கு அப்புறம் உங்களை நேரில் பார்க்க வேண்டும் என்று தான் நேற்று உங்களையை பாலோ பண்ணி வீட்டைத் தெரிஞ்சிக்கிட்டு .... இன்னைக்கு பேசுறேன்...
ரதிக்கு தலை சுறாறுவது போல இருந்தது.. நேற்று மதனோடதான் இருந்தேன்.. என்ன சொல்ல வருகிறாளோ...
நீங்கள் என்ன சொல்றீங்க...
ஆமா.. நேற்று நீங்கள் ஒருவரோடு கொஞ்சம் நெருக்கமாக பேசிக்கொண்டு இருந்தீங்களா.. அவர் என் கணவர்...
ரதிக்கு மயக்கமே வந்து விட்டது. அப்படியே ஆபிஸ் வாயிற்சுவரில் சாய்ந்து விட்டாள்..
மேம்.. நான் இன்னும் சொல்லவே இல்லை..
சொல்லுங்க...
அவர் என் கணவர் மதன் .. அவன் நல்லவன் கிடையாது. அதனால்தான் நான் டைவர்ஸ் வாங்கிட்டேன்...
நீங்கள் சொல்றத .. எப்படி நம்புவது ..
அந்த பெண்..தன் போனில் இருந்து போட்டோவைக் காட்ட.. அதைப் பார்த்த ரதி ..
அவர் ஏற்கனவே என்னிடம் சொல்லி உள்ளார்.. எனக்கு திருமணம் ஆகி.டைவர்ஸ் ஆகி விட்டது என்று.. அது நீங்கள் தானா ...
ஓ..உண்மையை சொன்னாரா ... ஏன் டைவர்ஸ் னு கேட்கலையா நீங்க ...
ம். கேட்டேன் .பிடிக்கலைனு சொன்னார்....
பொய்... அவன் ரொம்ப மோசமானவன்..
அப்புறம்..வேறு என்ன சொல்ல போறீங்க...
அவன் அம்மா பேச்சைக்கேட்டு என்னை ரொம்ப கொடுமை படுத்தினான்...நகையெல்லாம் வாங்கி விற்றுவிட்டு இன்னும் தரல ...
அவள் சொல்ல சொல்ல ரதிக்கு நம்பவா .. வேண்டாமா ஒரே குழப்பம்...
இங்க பாருங்க.. நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன். அப்புறம் உங்க விருப்பம்....என்று சொல்லி அங்கிருந்து போய் விட்டாள்..
ரதி செய்வதறியாது ஆபிஸில் நுழைந்தாள் .. அவள் தோழி அவளைப் பார்த்து குட் மார்னிங் சொல்லும் போதும்..பித்து பிடித்தவள் போல் தன் இருக்கையில் வந்து அமர்ந்தாள்.. வொர்க் பண்ணவே விருப்பம் இல்லாமல் இருந்தாள்.
அவளைப் பார்த்த அவள் சிநேகிதி..
ரதி..ரதி.. என்ன ஆச்சு...
மதன்.. மதன்..அப்படினு.. மெதுவா உச்சரிக்க..
என்னடி ..ரதி . என்னாச்சு...
ரதி மீண்டு வந்து..
மதனின் முன்னாள் மனைவி தன்னிடம் கூறியதை தோழியிடம் கூற....
ரதி ...நேரா மதன்கிட்டே கேட்டு விடு ..
உண்மை என்னன்னு தெரியாம முடிவெடுக்காத ..
ஒகே டி ...
ஆபிஸில் வொர்க் பண்ண முடியாமல் ஆஃப் டே லீவு கேட்டு வீட்டுக்கு வந்து விட்டாள்.
ரொம்ப குழம்பி போய் மதனுக்கே மெஸேஜ் போட்டாள்..
ஹாய்.
ஹலோ ரதி..ஹவ் ஆர் யு ...
ம்..
என்னாச்சு ரதி.. ஏன் சோகம்...
மதன் உங்ககிட்ட ஒன்னு கேட்கணும்.
கேளு ரதி ..
இன்னைக்கு உங்க முன்னாள் மனைவி என்ன பார்த்தாங்க...
யாரு.. அவளா.. என்ன சொன்னாள்..
அது வந்து...
ரதி..அவ .என்ன சொல்லியிருப்பா .. அவன் மோசமானவன். நகையெல்லாம் விற்றிட்டு தரல அப்படி னு தானே...
ஆமா மதன்..
என்ன கட்டிக்கிட்டு என் வாழ்க்கையை அழிச்சது பத்தாதுனு... எனக்கு கல்யாணமே ஆக விடாம பண்ணிகிட்டு இருக்கா... உன்கிட்ட இல்ல ரதி .. நான் பார்க்கிற பொண்ணுங்க கிட்ட எல்லார்கிட்டேயும் சொல்லி இன்னும் என்ன வாழ விடாமல் பண்ணிகிட்டு இருக்கா...
ரதி குழம்பியே போய் விட்டாள்...
ரதி ..ரதி.. ஹாய்
சொல்லுங்க மதன்...
அவ சொல்றத நம்புறியா ... நீ ஒகே சொன்னா ... நாளைக்கு அவள் சொன்னது பொய் னு நிருபிக்கேன்.
ம்
ஒகே ரதி .
நாளை போன் பன்றேன் .சொல்ற இடத்துக்கு வந்துடு...
என்ன உண்மை
என்ன பொய்.... ரதிக்கு தலைவலியே வந்து விட்டது
(தொடரும்)