அதிர வைத்த தேஜஸ் போர் விமான விபத்து.. நடந்த தவறு என்ன.. தீவிரமாக ஆராயும் நிபுணர்கள்

Su.tha Arivalagan
Nov 24, 2025,01:20 PM IST

- க.சுமதி


பெங்களூரு: துபாயில் நடந்த நிகழ்ச்சியில் சாகசம் மேற்கொண்ட இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் விபத்துக்குள்ளானது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து தற்போது தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது.


இந்திய பாதுகாப்புத்துறையின் முக்கிய அடையாளமாக விளங்குவதுதான் இந்த தேஜஸ் போர் விமானம். தேஜஸ் போர் விமான தொழில்நுட்ப ஆய்வுத் திட்டம் முதன் முதலில் 1983 இல் தொடங்கப்பட்டது. தேஜஸ் முதல் ஆய்வு  விமானம் ஜனவரி 4 ,2001இல்  பறக்கத் தொடங்கியது. 




இதனைத் தொடர்ந்து மேலும்  மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் இந்த விமானங்கள் 2015ல் இந்திய விமான படையில் சேர்க்கப்பட்டது.  இந்த விமானங்களில் அதிக தொலைவில் உள்ள எதிரி இலக்குகளையும் மிகத் துல்லியமாக கண்டறிய AESA ரேடார் பொருத்தப்பட்டுள்ளது. இதன் விலை சுமார் ₹600 கோடி ஆகும். தேஜஸ் விமானங்களின் வேகம் 2200KM/ h  அதாவது ஒளியின் வேகத்தை விட 1.6 மடங்கு அதிகமாகும். மேலும் இது 50 அடி உயரம் வரை பறக்கும் திறனும் 4000ஆயிரம் கிலோ எடையுள்ள ஏவுகணைகளை  சுமந்து செல்லும் திறனும் கொண்டவை. 


வானில் இருந்து கொண்டே வான் இலக்கையும் தரை இலக்கையும் கடலில் உள்ள இலக்குகளையும் துல்லியமாக கண்டறிந்து தாக்கும் வகையில் மும்முனை திறனுடன் வடிவ மைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள மேலும் ஒரு சிறப்பம்சம் வானிலேயே எரிபொருள் நிரப்பிக் கொள்ளும் திறன் கொண்டதாகும். இந்திய விமான படையில் இருந்து விடைபெற்ற மிக் ரக விமானங்களுக்கு பதிலாக இந்த தேஜஸ் விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 


தேஜஸ் விமானங்கள் இந்திய விமானப்படையில் சேர்த்திருப்பது விமானப்படைக்கு மேலும் பலம் கூட்டும் விதமாக அமைந்துள்ளது. இந்திய விமானப் படைக்காக மேலும் 97  தேஜஸ் மார்க் 1A ரக போர் விமானங்களை வாங்க  இந்திய அரசு HAL  நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில்தான் துபாய் விபத்து வந்து சேர்ந்துள்ளது. அந்த விமானத்தை இயக்கிய விமானி நம்ன் சியால் விபத்தில் வீர மரணமடைந்தார். அவர் தமிழ்நாட்டின் சூலூர் விமானப் படைத் தளத்தைச் சேர்ந்தவர். அவரது சொந்த ஊர் ஹரியானா மாநிலமாகும்.


போர் விமான சாகசத்தின்போது அதை சுழற்சி முறையில் இயக்க நமன் சியால் முயற்சித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அப்போது  நினைத்தது போல விமானம் சுழலாமல் போயிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. முழு விசாரணைக்குப் பிறகே எல்லாம் தெரிய வரும்.


(க.சுமதி, திருவண்ணாமலை தடம் பதிக்கும் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கம் மற்றும் தென்தமிழ் இணையதளம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)