காதல்!

Su.tha Arivalagan
Dec 24, 2025,04:56 PM IST

- இரா.காயத்ரி


காதல்! 

பட்டாம்பூச்சிக்கு பூவின் மீது

பனித்துளிக்கு புல்லின் மீது


காதல்!

பசுவிற்கு கன்றின் மீது

பட்டத்திற்கு நூலின் மீது


காதல்! 

நிலவுக்கு இரவின் மீது

சூரியனுக்கு பகலின் மீது


காதல்!

பிள்ளைக்கு தாயின் மீது

பிரியமானவர்களுக்கு இதயத்தின் மீது




காதல்!

படித்தவருக்கு புத்தகத்தின் மீது

படிக்காதவருக்கு அனுபவத்தின் மீது


காதல்!

காந்திக்கு அகிம்சை மீது

அன்னைதெரசாவிற்கு உதவியின் மீது 


காதல்!

பாரதிக்கு தமிழின் மீது

கண்ணம்மாவிற்கு பாரதியின் மீது 


காதல்!

இடத்திற்கு இடம் மாறுகிறது

இதயத்திற்கு இதயம் இடமாறுகிறது 


காதல்!

அன்பால் வந்தால் -உலகில்

எங்கும் இல்லை மோதல் ..


ஆதலால்

காதல் செய்வோம்

காற்றைப் போல 

எவர் மீதும்

நேசம் வைப்போம்!


(இரா.காயத்ரி, ஆசிரியர், தருமபுரி மாவட்டம்)