ஐந்து கரத்தனை.. யானை முகத்தனை.. விநாயகர் துதியின் பொருள் என்ன தெரியுமா?
- மாலதி ராஜாராம்
ஐந்து கரத்தனை, யானை முகத்தனை,
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை,
நந்தி மகன்தனை, ஞானக் கொழுந்தனை,
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே,,!!
விளக்கம்
ஐந்து கரத்தனை_ ஐந்து கரங்களை உடையவன், எவ்வாறு ஐந்து கரமுடையவன் அதாவது மனித கரங்கள் நான்கு தும்பிக்கை ஒன்று,
ஆனை முகத்தனை _ யானையின் முக அமைப்பை உடையவனே,,
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை _("இந்த்" _சந்திரனின் வளர்பிறை _) சந்திரனின் வளர்பிறை போன்ற வளைந்த வெண்மையான தந்தத்தை உடையவனே
நந்தி மகன்தனை _ நந்தி என்றால் மகிழ்ச்சி தருபவர் ஆனந்தம் அடைய செய்பவர் களிப்பூட்டுபவர் வளர்ச்சி பெறுபவர் இவ்வாறு பிரபஞ்சத்தில் நிறைந்துள்ள சிவன்_பார்வதியின் மகனான விநாயக பெருமானை!
ஞானக் கொழுந்தினை_ மெய்யறிவு அல்லது ஞானத்தின் வடிவாய் கொழுந்து விட்டு விளங்குபனை
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே__ புந்தி என்றால் மனம் என்று அர்த்தம் என் மனதிலும் சிந்தையிலும் நிறுத்தி வணங்குகின்றேனே
முழு பொருள்கோர்வையாக இதைப் பார்த்தால்..
மனிதக் கரம் நான்கு, தும்பிக்கை ஒன்று, ஐந்துகரங்களும், வளர்பிறை சந்திரனைப் போல வளைந்து மென்மையான தந்தத்தை உடையவனும், சிவ பார்வதியின் மகனை நமக்கு மெய்யறிவு எனும் ஞான ஒளியினை தரும் விநாயகப் பெருமானை எனது மனத்தில் வைத்து வணங்குகின்றேனே!!
திருமந்திர பாடல் இந்த விநாயகர் துதி
திருச்சிற்றம்பலம்
(மாலதி ராஜாராம், உழவாரப்பணி மற்றும் தேவாரம் திருவாசகம் முற்றோதுதல் செய்தல் தையல் மற்றும் கைவினைப் பொருட்கள் செய்தல் பொழுதுபோக்கு ஆகும். இல்லத்தரசி)