நட்பு

Su.tha Arivalagan
Dec 30, 2025,02:14 PM IST
- க. யாஸ்மின்சிராஜூதீன்

நானிருக்கிறேன் என்பதே 
நட்பின் வலிமை ஆகுமே ...
சொந்த பந்தம் இல்லையே 
அனைத்திற்கும் மேலான ஒன்றுதான் 
எதையும் எதிர்பார்ப்பதில்லையே 
அன்பு ஒன்றே  போதுமே ....
மகிழ்ச்சி  அங்கே காணலாம் ..!!!
மனங்களின் புரிதல் நட்புதான் 
வயது என்பது தடையில்லையே



சிறுவயது நட்புதான் பூரிப்புதான் ..
வளர்பருவ நட்புதான் துணிந்து நிற்கும்தான்...
முதிர்பருவ நட்புதான் அனுபவம் சொல்லும்தான்...
கல்வி,விளையாட்டு,பயணம்...
என்று எங்கே சென்றாலும் நட்புமலர் 
மலர்ந்திடும்... மணம்கமழ்ந்திடும்...
நட்புக்கு எல்லை இல்லையே 
சிறகை விரித்து பறக்குமே....
அறிவுடையார் நட்பு வளர்பிறைதானே 
பேதைகளின் நட்பு தேய்பிறைதானே 
நற்பண்புடையார் நட்பு இன்பம்
தரும்தானே...
நட்பு என்பது சிரித்து மகிழமட்டுமல்ல
தவறைகடிந்துதிருத்துவதுமாகுமே...
ஆடைஇழந்தவனுக்கு மானம் காக்க 
கை உதவுவது போல...
நண்பன் துன்பத்தை விரைந்து நீக்குவதே  நல்லநட்பு ஆகுமே ...
திருக்குறள் நமக்கு நட்பின் சிறப்பை 
எடுத்துக்கூறுதே....
முகம்பாராமல் உள்ளத்தால் ஒன்றுபட்ட...
கோப்பெருஞ்சோழன்பிசிராந்தையார்
நட்புதான்....
நட்புக்குஇலக்கணம்ஆகுமே...!!!
உள்ளன்பு ஒன்றே சிறந்தநட்பாகுமே..!  
இனிமையாக பழகிடுவோம்...!!!
உண்மையாக இருந்திடுவோம்...!!!
நட்புக்கோர்இலக்கணமாய்...!!!
நான் என்ற அகந்தையை தூக்கி எறிந்திடுவோம்..!!!
நட்பு மலர் வாசம்... 
உலகம் முழுவதும்வீச ...
கோடி இன்பம் கண்டிடுவோம்...!!!
இன்பம் பொங்க வாழ்ந்திடுவோம்..!!

(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாக  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)