எதையாவது எழுதலாமே!?
- ப ந ராஜேஷ் கண்ணா
எதை எழுதலாம் என்று எத்தனிக்கும் பொழுது
இதை எழுதலாமா அல்லது அதை எழுதலாமா?
இதை எழுதினால் ஏதாவது பிரச்சினை வருமா?
அதை எழுதினால் யாராவது எதிர்ப்பு தெரிவிப்பார்களா?
நாட்டு நடப்பு எழுதலாமா?
நாம் நினைத்ததை எழுதலாமா?
வீட்டுக் குறிப்புகள் எழுதலாமா?
துணுக்குகள் எழுதலாமா?
கவிதைகள் எழுதலாமா?
கதைகள் எழுதலாமா?
விவாதங்கள் எழுதலாமா? விசாரணைகள் எழுதலாமா?
வர்ணனையாக எழுதலாமா?வஞ்சனையாக எழுதலாமா?
யதார்த்தமாக எழுதலாமா? கலப்புகளோடு எழுதலாமா?
உண்மையை எழுதலாமா?
பொய்யை எழுதலாமா?
அலசி ஆராய்ந்து எழுதலாமா? குழப்பமாக எழுதலாமா?
சமையல் குறிப்புகளை எழுதலாமா? கொண்ட சுவைகளை எழுதலாமா?
உறவு முறைகளை எழுதலாமா? விருந்தோம்பலை எழுதலாமா?
மொழியை எழுதலாமா?
கணிதத்தை எழுதலாமா?
அறிவியலை எழுதலாமா?
சமூக அறிவியலை எழுதலாமா?
குற்றத்தை எழுதலாமா?
குற்றம் புரிந்தவரை எழுதலாமா?
குற்றத்தை விசாரித்தவரை எழுதலாமா?
சாட்சியை எழுதலாமா?
அழுபவரை எழுதலாமா? சிரிப்பவரை எழுதலாமா?
குழப்பத்தில் இருப்பவர்களை எழுதலாமா?
பிரச்சனைகளில் ஆழ்ந்தவரை எழுதலாமா?
குடும்பத்தை பற்றி எழுதலாமா?
கூட்டுக் குடும்பத்தை பற்றி எழுதலாமா?
இவ்வளவு எழுதலாமா-க்களுக்கிடையே
இதையாவது எழுத முடிந்ததே என்ற சந்தோஷத்தோடு
சிலாகித்து போனேன்!
(ப ந ராஜேஷ் கண்ணா, M.Sc.,M.A.,M.A., B.Ed., PGD G&C, CELT, பட்டதாரி ஆசிரியர், அரசு மாதிரி உயர்நிலைப்பள்ளி, திருவூ,ர் திருவள்ளூர் மாவட்டம்)