மாமல்லபுரத்திலிருந்து.. பெண்களுக்கு விஜய் தரப் போகும் மெசேஜ் என்னாவா இருக்கும்?
சென்னை: தவெக சார்பில் இன்று மாலை மாமல்லபுரத்தில் நடைபெறப் போகும் மகளிர் தின விழா எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. விஜய் இதில் கலந்து கொண்டு பெண்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியலுக்கு வந்தது முதலே, தவெக தலைவர் விஜய்யைச் சுற்றி பல சர்ச்சைகள் வட்டமடித்துக் கொண்டே உள்ளன. லேட்டஸ்டாக இரண்டு பெரும் சர்ச்சைகளை அவர் சந்திக்க நேரிட்டது. முதல் விவகாரம் விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா கோர்ட்டுக்குப் போனது. அதுதொடர்பான அபிடவிட் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் திருமண விழாவுக்கு நடிகை திரிஷாவுடன் அவர் பகிரங்கமாக வெளிப்படையாக இணைந்து வந்தது மேலும் பரபரப்பைக் கூடியது. நண்பர்களாக வந்தார்களோ அல்லது வேறு காரணமோ, எதுவாக இருந்தாலும், சர்ச்சை வெடித்து வரும் நிலையில் இதை விஜய் தவிர்த்திருக்கலாமே என்று பலரும் பேச ஆரம்பித்துள்ளனர்.
விஜய்யைச் சுற்றி கிளர்ந்துள்ள இந்த இரு விவகாரங்களாலும் அவருக்கு பெண்கள் மத்தியில் ஆதரவு குறையும் என்ற பேச்சும் எழுந்துள்ளது. இந்த நிலையில்தான் திடீரென மகளிர் தின விழா கொண்டாடப்படவுள்ளது, அதில் விஜய் கலந்து கொண்டு சட்டசபைத் தேர்தலையொட்டி பெண்களுக்காக வாக்குறுதிகளை அளிக்கவுள்ளார் என்ற அறிவிப்பு வெளியானது.
இது தவெகவினரை மட்டுமல்லாமல் அனைவரது ஆர்வத்தையும் தூண்டி விட்டுள்ளது. விஜய் என்ன பேசப் போகிறார், என்ன வாக்குறுதி அளிப்பார் என்ற எதிர்பார்ப்புக் கிளம்பியுள்ளது. மகளிர் தின விழா என்பதால் யாராவது முக்கியமான பெண் பிரபலமும் இதில் விஜய்யுடன் இணைந்து பங்கேற்பார்களா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
இன்று மாலை 3 மணி முதல் 5 மணி வரை விழா நடைபெறவுள்ளது. விஜய் செய்யப் போகும் டேமேஜ் கன்ட்ரோல் என்னவாக இருக்கும் என்பது இப்போது தெரிந்து விடும்.