அமாவாசை அன்று அவள் என் செய்வாள்?
- அ.வென்சி ராஜ்
ஆதவன் ஒளிந்து கொண்ட அடுத்த நொடியே....
கட்டவிழ்த்து விடப்பட்ட காரிருளில்....
வான் மகளுக்கு பொட்டென வந்து நிற்கும் வெள்ளி நிலவே.....
நிதமும் புது விதமாய்....
தினம் தினம் உன்னை மாற்றி...
வான் மகளை அழகாக காட்டத்தான் பிறந்தாயோ....
அமாவாசை அன்று அவள் என் செய்வாள்.....
என்பதை நீ என்றாவது நினைத்ததுண்டோ....
சொல் நிலவே...
மூடிவைத்த பொருளுக்கே மதிப்பதிகம் என்பார்கள். ...
அதற்காகத்தான்....
அவ்வப்போது ஒளிந்து கொண்டு....
எங்களோடு
விளையாட துணிந்தாயோ....
நிதம் நிதமும் நீ கரைகையிலே....
என்னை தான் நினைத்தாயோ...
என்னை காணா ஏக்கத்திலே....
தேய்ந்தே தான் போனாயோ...
வளர்பிறையின் போதெல்லாம் ....
வஞ்சி இவளை நினைத்து தான் ...
மகிழ்வாய் மனம் துளிர்த்தாயோ....
உன் உடல் வளர்ச்சிதனை கண்டாயோ. ..
சொல் நிலவே. .
நட்சத்திர தோழிகள் உடன் இருந்தால்....
என்னை நீயும் பார்த்து நட்பாய் தான் சிரிப்பாயோ...
அவர்கள் இல்லா பொழுதினிலே கோட்டை கட்டி தனிமையிலே தான் நீயும் தவிப்பாயோ. ..
சொல் நிலவே. ...
உன்னை பார்த்து சோறுண்ட தலைமுறையில்...
எஞ்சியது நாங்கள் தானோ...
இன்றிருக்கும் குழந்தைகள் எல்லாம்...
உன்னை பார்க்கக் கூட..
கைப்பேசி தூக்குகின்ற அவல நிலை காண்பாயோ...
சொல் நிலவே. ...
நான் இருக்கேன் உனக்காக என்று சொல்ல நிஜமாய் நான் இருக்கேன்....
என்னவளே...
நிலவு பெண்ணே...
உன் குளிர் ஒளியை கூடத்தான் கொடுத்திடுவாய்....
குட்டி தூக்கம் போட்டு கனவில் கூட உன்னை காண....
ஆவலாய் தான் இருக்கின்றேன்...
எனதருமை நிலவு பெண்ணே....!
(அ. வென்சி ராஜ்... திருவாரூர் பகுதியைச் சேர்ந்தவர். பண்ணைவிளாகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் பட்டிமன்ற பேச்சாளராகவும், தன்னம்பிக்கை பேச்சாளராகவும், சமூக செயல்பாட்டாளராகவும் அறியப்படுகிறார். திருவாரூர் தமிழ்ச்சங்கம், தமிழ்நாடு புலவர் பேரவை, இந்தியன் ரெட் கிராஸ் ஆகியவற்றில் வாழ்நாள் உறுப்பினராக உள்ளார். செஞ்சிலுவை சங்கத்தில் கொரடாச்சேரி இணை கன்வீனியராகவும், திருவாரூர் இன்னர்வீல் சங்கத்தில் உறுப்பினராகவும், ஹெல்ப் லைன் டிரஸ்ட் என்னும் ரத்ததான அமைப்பில் தலைமை ஆலோசகராகவும் பயணம் செய்கிறார்)