தமிழகத்தில்.. பள்ளிகள் திறப்பு எப்போது..? தேதி அறிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
சென்னை: தமிழகத்தில் திட்டமிட்டபடியே, ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கும். அதில் எந்த மாற்றமில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதியுடன் பள்ளிகள் நிறைவடைந்து கோடை விடுமுறைகள் தொடங்கியது. அப்போது மீண்டும் பள்ளிகள் ஜூன் 2ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது கோடை வெயில் உச்சமாக இருக்கும் காரணத்தால் மேலும் கோடை விடுமுறை நீட்டிக்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவி வந்தது. மக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். தொடர்ந்து பள்ளிகள் பிறப்பு தள்ளி போகுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழகத்தில் திட்டமிட்டபடியே பள்ளிகள் ஜூன் 2ல் திறக்கப்படும். இதில் எந்த மாற்றமும் இல்லை என கூறினார்.