நான் யார்? நாம் யார்? .. மகா தத்துவம் & மகா கேள்வி!

Maitreyi Niranjana
Aug 26, 2025,10:29 AM IST

- மைத்ரேயி நிரஞ்சனா


இந்த கேள்விக்கான விடை கிடைக்கிறதோ இல்லையோ ஆனால் இந்த கேள்வியை நமக்கு நாமே கேட்டுக் கொள்ளுமாறு ரமண மகரிஷி முதல் பல ஞானிகள் நமக்கு கூறி வருவது! 


இதை நான் கேட்டுக் கொண்டே வந்தால் நமக்கு விடை கிடைத்து விடுமா! நமக்கு விடை வேண்டுமா அல்லது நாம் யாரென்று தெரிய வேண்டுமா? இது ஒரு முக்கியமான கேள்வி! 


விடை எங்கிருந்து வேண்டுமென்றாலும் வரலாம்.. ஆனால் அது ஒரு பதிலாக மட்டுமே இருக்கும்.. அது நமக்கு நாம் யார் என்று உணர்த்தி விடுமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.. அவரவர் தாகத்துக்கு அவரவர் மட்டுமே தண்ணீர் அருந்த முடியும்! அதுபோல உண்மையை அவரவர் உணர்வது மட்டுமே தீர்வாக முடியும்! ஆன்மிகம் என்பது தனி மனிதன் சம்பந்தப்பட்டது..


நான் யார் என்ற சுய ஆய்வை நாமே மேற்கொண்டால் நமக்கு ஒவ்வொரு விடையாக தோன்றும்.. அதை எல்லாமே நிராகரித்து கொண்டே வந்தால்.. உண்மையிலேயே புரிந்து அது வல்ல இதுவல்ல என்று நிராகரித்துக் கொண்டே வந்தோமானால் எது நாமோ that shines by itself.




ஒரு சின்ன எக்ஸாம்பிள்.. காஷ்முஷ் ஒரு கார் டிரைவர்.. அவர் தொடர்ந்து 24 மணி நேரமாக கார் ஓட்டிக் கொண்டிருக்கிறார்.. நிறுத்தவும் இல்லை.. இறங்கவும் இல்லை.. போகப்போக தன்னையே காராக நினைக்க ஆரம்பிக்கிறார்.. வழியில் காருக்கு என்னென்ன நிகழ்ந்தனவோ.. கார் சூடானது.. யாரோ ஒருவர் லைட்டாக இடிக்க ஸ்கிராட்ச் ஆனது.. இப்படியாக எல்லாவற்றையும் தனக்கே நடந்ததாக எண்ணினால் எவ்வாறு இருக்கும்? கார் வேகமாக சென்று மற்ற வாகனங்களை முந்தி சென்றால் பெரும் சந்தோஷம் அடைகிறார்.. லைட் ஆக ஸ்கிராட்ச் ஆன போது துக்கப்படுகிறார்.. இப்படியாக எல்லாவற்றையும் ரெக்கார்ட் செய்து கொண்டு அதை நினைத்து நினைத்து சந்தோஷமும் துக்கமும் மாறி மாறி உணர்வுகளால் ஆட்கொள்ளப்படுகிறார்!


கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் நாமும் அந்த நிலையில் தான் உள்ளோமா? இந்த உடலை நாம் என்று நினைத்துக் கொண்டுள்ளோம் இல்லையா? இதை ஓட்டுகிறோம் என்பதை மறந்து விட்டிருக்கிறோம் இல்லையா? பிறந்ததிலிருந்து நடந்தவற்றை அப்படியே ரெக்கார்ட் செய்து கொண்டு ‘நான்’ என்ற பிம்பத்தை உருவாக்கிக் கொண்டு நல்லவன், கெட்டவன், உயர்ந்தவன் தாழ்ந்தவன், அந்த ஜாதி, இந்த மதம் என்று பிரித்துக் கொண்டு பலவிதமான நம்பிக்கைகளை உருவாக்கிக் கொண்டு அவதிப்படுகிறோம்.. இது ஒரு விதமான கற்பனையே அன்றி உண்மை அல்ல ..என்பதை சுய ஆய்வு மற்றும் தியானத்தில் உணர முடியும்.. அப்போது நிஜமாகவே இந்த வாழ்க்கை ஒரு விளையாட்டு போல வாழ முடியும்..! 


கவலைகளும் துக்கங்களும் இந்த உடலை மற்றும் மனது உருவாக்கும் பிம்பத்தையும் நாம் அடையாளப்படுத்திக் கொள்வதினால் நடக்கிறது என்பதை உணர்ந்தோம் ஆனால்.. நாம் வாழ்க்கையை வித்தியாசமான கண்ணோட்டத்தில் அணுகவும்.. எல்லா சூழ்நிலைகளையும் சீரியஸான கண்ணோட்டத்தில் பார்க்காமல்.. ஒரு விளையாட்டாக கடந்து செல்வோம்! 


நாம் தொடர்வோம்.


மைத்ரேயி நிரஞ்சனா.. எழுத்தாளர், பேச்சாளர், பாடகி என பன்முகத் திறமையாளராக வலம் வருகிறார். இல்லத்தரசி என்ற நிலையிலும் சிறந்து விளங்குபவர். மதுரையில் பிறந்தவர், சேலத்தில் வசிப்பவர். அடிப்படையில் ஒரு பொறியாளர். கடந்த 15 வருடமாக ஆன்மீகம் மற்றும் தியானத்தில் அதிக ஈடுபாடு. ஒரே மனித குலம் அமைய வேண்டும் என்ற கனவுடன் வலம் வருபவர்.  ஆன்மிகம் மட்டுமே மனிதகுலத்தை பயமற்ற, போட்டியில்லாத புதிய உலகிற்கு அழைத்துச் செல்லும், அங்கு பணம் மற்றும் போட்டிக்குப் பதிலாக அன்பு மட்டுமே அடிப்படையாக இருக்கும். பொறுப்புடன் கூடிய சுதந்திரமே புதிய மதமாக இருக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்.