TVK Cabinet: தவெக அமைச்சரவையில்.. எத்தனை அமைச்சர்கள்.. யார் யாருக்கு எந்தத் துறை?
May 09, 2026,09:18 PM IST
சென்னை: தவெக தலைவர் விஜய் தலைமையில் நாளை பதவியேற்கவுள்ள அமைச்சரவையில் மொத்தம் 9 அமைச்சர்கள் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அமைச்சரவை பின்னர் விரிவுபடுத்தப்படும்.
முதல்வர் விஜய் உள்பட மொத்தமாக 9 அமைச்சர்கள் இடம் பெறக் கூடும். முதல் கட்ட அமைச்சரவையில் தவெகவினர் மட்டும் இடம் பெற அதிக வாய்ப்புகள் உள்ளன.
யார் யாருக்கு எந்தெந்தத் துறை என்ற உத்தேசப் பட்டியல் ஒன்றும் வெளியாகியுள்ளது.
பொது நிர்வாகம், காவல்துறை உள்ளிட்ட முக்கியத் துறைகள் முதல்வர் விஜய் வசம் இருக்கும்.
பொதுப்பணித்துறை - கே.ஏ.செங்கோட்டையன், நகராட்சி நிர்வாகத்துறை - என். ஆனந்த், மின்சாரத்துறை - சிடிஆர் நிர்மல்குமார், விளையாட்டு மற்றும் மது விலக்குத்துறை - ஆதவ் அர்ஜூனா, ஆதி திராவிடர் நலத்துறை - ராஜ்மோகன், சிறுபான்மை நலத்துறை - முஸ்தபா, பத்திரப் பதிவு மற்றும் வணிகவரித்துறை அருண்ராஜ், பள்ளிக் கல்வித்துறை - வெங்கட்ரமணன் என்று உத்தேசப் பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது.
நாளை காலை 10 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பதவியேற்பு விழா கோலாகலமாக நடைபெறவுள்ளது. வருகிற 13ம் தேதிக்குள் சட்டசபையைக் கூட்டி தனது பெரும்பான்மை பலத்தை விஜய் நிரூபிக்க ஆளுநர் ஆர்லேகர் உத்தரவிட்டுள்ளார்.