ஏன்?

Su.tha Arivalagan
Jan 08, 2026,03:36 PM IST
- பா. பானுமதி

மார்கழி பனியில் குளிக்கிறாய் 
மாலை வெயிலை ரசிக்கிறாய்
வாடைக்காற்றில் சிலிர்க்கிறாய் 
வசந்தம் காலம் போல இருக்கிறாய் 
விடியலிலே விழிக்கிறாய் பின் ஏன் 
கோடையாய் தகிக்கிறாய்
கொதிகலனாய் கொதிக்கிறாய் 
வாசலில் கோலம் போடுகிறாய் 



வரவேற்பதாக சொல்கிறாய் 
ஆனால் வந்தால் மட்டும் தள்ளுகிறாய் 
பாதிமுகம் காட்டி கொல்கிறாய்
பக்கத்தில் வந்தால் தள்ளுகிறாய்
வண்ண உடைகளில் ஜொலிக்கிறாய்
வருகை புரிந்தால் வசை பாடுகிறாய் 
குயிலின் குரலை கொண்டிருக்கிறாய் 
மயிலின் சாயல் பெற்றிருக்கிறாய் 
மகிழ்ச்சியின் தூறல் போட்டு செல்கிறாய் 
மாசில்லா சாரல் வீசி போகிறாய் 
தென்றலோடு பிறந்தாலும் புயலின் துணை கொள்ளலாமா 
மன்றத்தில் வர மனதுக்குள்ளே தயங்கலாமா 
ஒத்திகை எனக்குள்ளே வைத்துக் கொண்டேன் 
முத்துநகை உனைச் சேர முயன்று வருவேன்