இயற்கையில் ஏன் .. இந்த முரண்பாடு?

Su.tha Arivalagan
Jan 17, 2026,03:04 PM IST

- இரா.மும்தாஜ் பேகம் 


வெண்ணிலவை வரவேற்க 

விழி மூடும் வெண் கதிர்கள்

விடியலை வரவேற்க 

விழித்திருக்கும் விண்மீன்கள்

கதிரவனை வரவேற்கக்

காத்திருக்கும் பனித்துளிகள்

கார்முகிலை வரவேற்க 

காத்திருக்கும் கழனியெல்லாம்.




வசந்தத்தை வரவேற்க 

வனமரங்கள் இலையுதிர்க்கும்

வண்டுகளை வரவேற்க 

வண்ணமலர்கள் தேன் சொறியும்

புத்தாண்டை வரவேற்க 

புதைந்து விடும் நாட்களெல்லாம்

புதுமையை வரவேற்க 

புதைந்து விடும் பழமையெல்லாம்


தன் மகவை 

தான் உண்ணும் முதலை

தன் மகவால் 

தான் மடியும் நண்டு

இயற்கையில் ஏன் 

இந்த முரண்பாடு

எல்லாம் 

இறைவனின் ஏற்பாடு


(எழுத்தாளர் இரா. மும்தாஜ் பேகம், திருச்சியைச் சேர்ந்தவர். ஓய்வு பெற்ற ஆசிரியர்)