காதலர் தினம் .. அதை ஏன் இன்று கொண்டாடுகிறோம் தெரியுமா?
- கவிஞர் க. முருகேஸ்வரி
இன்று பிப்ரவரி 14 காதலர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
கிபி 3 ஆம் நூற்றாண்டில் ரோமானிய பேரரசர் இரண்டாம் கிளாடியஸ் இளைஞர்கள் இள வயதில் திருமணம் செய்து கொண்டால் போர்களில் ஆர்வம் காட்ட மாட்டார்கள் என்று திருமணத்திற்கு தடை விதித்தார்.
இயற்கைக்கு புறம்பான அந்தத் தடையை மீறி காதலர்களுக்கு மறைமுகமாக திருமணம் செய்து வைத்தார் புனித வாலண்டைன் என்ற மதகுரு.
இதனைத் தெரிந்து கொண்ட அரசர் புனித வாலண்டைனை தூக்கிலிட்ட நாள் தான் பிப்ரவரி 14. அவரது நினைவாகவும் உண்மைக் காதலைப் போற்றும்வகையிலும் ஒவ்வொரு வருடமும் இந்த நாளில் வாலண்டைன்ஸ் டே காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.
தற்போது அனைவரும் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் ஒரு தினமாக உருவெடுத்துள்ளது. பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 14 வரை காதலர் வாரமாகவும் கொண்டாடப்படுகின்றது. இந்த நாள்களில் பரிசுப் பொருட்களும் வாழ்த்து அட்டைகளும் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).