வாழ்க்கை போல நேரமும் காத்திருப்பதில்லை!
- க. யாஸ்மின் சிராஜூதீன்
வாழ்க்கை போல நேரமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லையே ...
நாம் காத்திருத்தல் வேண்டும்
நமக்கான நேரம் வரும்வரையே ...
நேரம் காலம் பாராமல்
உழைத்து உயர்ந்தோர் வழிகாட்டியே...
நேரமேலாண்மை முக்கியம்
மேலான வாழ்க்கை வாழவே....
நேரத்தை மீட்க முடியாது
உயிரும் நேரமும் ஒன்றுதான்....
காலம் காட்டும் கண்ணாடி கடிகாரமே
என்றும் உயரத்தில் இருக்குமே....
காலத்தே செய்யவேண்டியதை செவ்வனே செய்திட்டால்
நீயும் எட்டா உயரத்தில் இருப்பாயே.....
நேரத்தோட உறங்கிட்டால்
உள்ளுறுப்புகள் புத்துணர்ச்சி ஆகுமே....
நாளைய உந்தன் ஓட்டத்திற்கு
இரவு உறக்கம் வேண்டுமே....
நேரமும் வாழ்கையும் வேகமாக ஓடுமே ...
திரும்பிப் பார்த்தால் நினைவுகளாக நினைவில் ஊஞ்சல் ஆடுமே....
நேரத்தோடு வாழ்க்கைப்பயணத்தை
சிறந்த செயல்களால் நிரப்பிடு...
நேரத்துடன் நன்மை,தீமை,இன்பம்,துன்பம் சுழலும் தான்....
மோசமான சூழ்நிலைகள் நம்மை தலைகீழாக புரட்டிப்போடும்தான்....
இன்பச்சூழ்நிலைகள் தூங்கவிடாமல்
இன்பவெள்ளத்தில் நீச்சல் அடிக்கும்தான்..
அவசரத்தில் நேரம் ஓடுமே
காத்திருந்தால் நேரம் நகராதே...
எல்லா நேரமும் ஒன்றுதான்
நம் சிந்தனைப்படி இருக்கும்தான்...
நேரம் நேரம் நேரம்தான்
தன்னிகரில்லாத ஒன்றுதான்...
சேவல் கூவ விழித்திடு
சோர்வில்லாமல் உழைத்திடு ...
நேரம் உன்னை உயர்த்திடும்
சிகரத்திலே ஏற்றிடும்...!!!