உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
- சரளா ராம்பாபு
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடினும் சந்தித்துப் பேசியது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா இந்த சந்திப்பை மிகுந்த கவனம் எடுத்துப் பார்த்து வருகிறது.
இரண்டு நாள் அரசு முறை பயணமாக அதிபர் படின் டிசம்பர் 4ஆம் தேதி இந்தியாவிற்கு வருகை தந்தார். 2022 உக்ரைன் மீதான தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கு அதிபர் புடின் வருகை தருவது இதுவே முதல் முறைாயகும். இந்தியாவில் நடந்த ஜி 20 உச்சி மாநாட்டில் புடின் பங்கேற்கவில்லை.
இந்தியாவிற்கு வருகை தந்த அதிபர் புடினை, புரோட்டாக்காலையும் மீறி, நேரடியாகச் சென்று பிரதமர் மோடி ஆரத்தழுவி கை குலுக்கி வரவேற்றார். அதேபோல புடினும் தனது பிரத்தியேக காரை விடுத்து பிரதமர் மோடியுடன் சேர்ந்து அவருடன் பயணித்தது நமது பாதுகாப்பு கட்டமைப்பை உலக நாடுகளுக்கு பறை சாற்றியது.
நேற்று காலையில் ராஜ்காட்டில் உள்ள தேசப்பிதா, மகாத்மா காந்தி நினைவிடத்தில் அதிபர் புடின் மரியாதை செலுத்தினார். அங்குள்ள வருகைப் பதிவேட்டில் கையெழுத்து இட்டார். காந்தியின் கொள்கைகள் நவீன இந்தியாவிற்கு மிகவும் பொருத்தமானவை. உலகின் மாபெரும் சிந்தனையாளர் காந்தி. சுதந்திரம் இரக்கம் சேவை ஆகியவை குறித்த காந்தியின் பார்வை கண்டனங்கள் கடந்து சமூகங்களை ஊக்குவிப்பதாக அதிபர் புடின் தனது குறிப்பில் எழுதியுள்ளார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் புடினுக்கு அரசு முறையில் சிறப்பான வரவேற்பும் அஏலிக்கப்பட்டது. அதன் பிறகு ஹைதராபாத் இல்லம் சென்ற அதிபர் புடின், பிரதமர் மோடியுடன் முக்கிய சந்திப்பை மேற்கொண்டார். இதுதான் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. பிரதமர் மோடி இந்த சந்திப்பை வரலாற்று சிறப்புமிக்கது என்று கூறினார். இந்த சந்திப்பின்போது இரு தரப்பு உறவுகள், சர்வதேச விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் இந்தியா- ரஷ்யா இடையேயான ஒத்துழைப்பு, புலம்பெயர்தல், சுகாதார வளர்ச்சி, மருத்துவ கல்வி, உணவு பாதுகாப்பு, துருவ கப்பல்கள், கடல் சார் ஒத்துழைப்பு, உரங்கள் இறக்குமதி முதலியவை தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதில் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தம் முக்கியமானது. காரணம், இந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. அதையும் மீறி இந்தியா, ரஷ்யா இதை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தபோது அமெரிக்கா தனது அணு சக்தி தேவைகளுக்கான சில பொருட்களை எங்களிடமிருந்து இப்போது வரை வாங்கி வருகிறது. அப்படி இருக்கும்போது இந்தியா ஏன் கச்சா எண்ணெய்யை எங்களிடமிருந்து வாங்கக் கூடாது என்று கேள்வி எழுப்பினார். இது அமெரிக்காவுக்கு நெருக்கடியைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோடி -புடின் சந்திப்பு அமெரிக்காவை நெளியை வைத்திருப்பதாக சர்வதேச விவகாரங்கள் தொடர்பான நோக்கர்கள் கருதுகிறார்கள். காரணம், அமெரிக்காவின் பல்வேறு முனுமுனுப்புகளையும் தாண்டி இரு தலைவர்களும் வெற்றிகரமாக இந்த சந்திப்பை முடித்துள்ளனர். இது அமெரிக்காவுக்கு விடப்படும் சவாலாக கருதப்படுகிறது. முன்னதாக ரஷ்யாவில் இருந்து எரிபொருள் எண்ணெய் இறக்குமதி செய்வதை தவிர்ப்பதற்காக அமெரிக்கா 25% கூடுதல் வரியை விதித்தது. இது இந்தியாவின் மீதான அமெரிக்க வரியை 50 சதவிகிதமாக உயர்த்தியது என்பது நினைவிருக்கலாம்.
ஆக மொத்தத்தில் புடின் - மோடி சந்திப்பு அமெரிக்காவை அசைத்துப் பார்க்குமா அல்லது மேலும் ஆவேசமாக்குமா என்பது போகப் போகத்தான் தெரியும்.
(சரளா ராம்பாபு, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)