ஆசிரியர் இன்றி அமையுமா கல்வி?

Su.tha Arivalagan
Feb 18, 2026,02:39 PM IST

- க.யாஸ்மின் சிராஜூதீன்


ஆசிரியர் இன்றி அமையுமா கல்வி? 

வேரின்றி நிற்குமா மரம்

ஆசிரியர் இன்றி தழைக்குமா கல்வி

அறிவொளி ஏற்றும் தீபம் ஆசானே

குன்றின் மேலிட்ட விளக்கு என்பதில் பெருமையே.... 

உணர்வுக்கு உயிரளித்து 

பொருள் புரிய வைக்கும் அழகே சிறப்பம்சமே... 

அறிவொளி தேடும் பயணத்தில் 

உருகும் மெழுகும் ஆசானே




ஊடகவழிக்கல்வி வெறும் செய்தி திணிப்பே.... 

கற்கண்டு கல்வியை 

கசப்பு மருந்தாக தர முயல்வதேனோ... 

ஆகச்சிறந்த கல்வி ஆசிரியராலே... 

ஆக்கம் இல்லாத கல்வி ஆசிரியர் இல்லாததாலே... 

விஞ்ஞான யுகத்தில் ஆசிரியர் தேவையா? 

இதுவே இன்றைய முக்கிய கேள்வியா?

சரிதான் விடையை காலம் தன் கையில் ஏந்தட்டும்.. 

ஆசிரியர்களின் அறப்பணி தொடரட்டும்... 

மாணவர்களின் தரம் உயரட்டும்...!!!! 


(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாக  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)