மாற்றுத்திறனாளி (கவிதை)

Su.tha Arivalagan
Oct 31, 2025,04:50 PM IST

- சிவ .ஆ.மலர்விழி ராஜா


விழி இருந்தும் ஒளி இல்லாத மங்கையிவள்.......!


எண்ணங்களும்.....

வண்ணங்களாய் உனது

கைகளிலே மலருதடி......!


ஸ்வரங்கள் கூட உன்னிடமே  சலங்கையிட்டு ஆடுதடி .......!


காற்றினிலே உன் குரலும் தென்றலென

வருடி விட்டு......


தேன் மழையை பொழியுதடி......!


வண்ணத்து பூச்சி போல 

எண்ணத்தில் மிளிர்கின்றாய்......!


கண்ணில் "ஒளி" இல்லையென என்று நீ

கலங்கி நின்றாய்.........!




கதிரவன் உதித்தாலும்

நிலவது வளர்ந்தாலும்.....


நம்பிக்கையை

ஒளியாக்கி.......

நடையினிலே  துயில்கின்றாய்.......!


நீருக்குள் மீன்களென 

உன் வானம் மகிழுதடி.....!


வரவெல்லாம் உன் கரத்தில் வரம் பெற்று 

சிரிக்குதடி.....!


அவன் படைத்த உலகினிலே.....!


அனைத்துமே மாயை என.....உன் விழியை

மறைத்தானோ......???


இறைவன்...!!!



(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)