நியூ இயர் ஸ்வீட்ஸ் சாப்பிடலாம் வாங்க.. காதலரை வரவழைத்து.. பெண் செய்த விபரீதம்!

Su.tha Arivalagan
Jan 02, 2026,12:10 PM IST

மும்பை: புத்தாண்டு இனிப்பு தருவதாகக் கூறி வீட்டிற்கு வரவழைத்து, தனது காதலனின் பிறப்புறுப்பை ஒரு பெண் கத்தியால் அறுத்த சம்பவம் மும்பையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மும்பையைச் சேர்ந்த அந்தப் பெண்ணுக்கு 25 வயதாகிறது. சியான் பகுதியைச் சேர்ந்த 44 வயது நபருடன் இவருக்கு காதல் இருந்து வந்தது. அந்த நபருக்கு ஏற்கனவே கல்யாணமாகி குழந்தைகள் உள்ளன. இருவருக்கும் நீண்ட காலமாக உறவில் இருந்து வந்துள்ளனர். 


இந்த நிலையில் இளம் பெண், தனது காதலரிடம், உனது மனைவியை விட்டு விட்டு என்னுடன் வந்து விடு. என்னைத் திருமணம் செய்து கொள் என்று கூறி வந்துள்ளார். அதற்கு அந்த நபர் மறுத்து வந்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்ததாகத் தெரிகிறது.




இந்த நிலையில் காதலியின் தொல்லை தாங்க முடியாமல் காதலன் பீகாருக்குப் போய் விட்டார். அங்கிருந்து வேலை பார்த்து வந்துள்ளார். ஆனாலும் காதலி விடவில்லை. தொடர்ந்து போன் செய்து வற்புறுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் மும்பைக்கு மீண்டும் திரும்பிய காதலர், தனது காதலியுடன் பேசுவதை நிறுத்தி விட்டார். போன் எண்ணையும் பிளாக் செய்து விட்டதாக தெரிகிறது. 


இதனால் ஆத்திரமடைந்த காதலி, புத்தாண்டுக்கு வருமாறும், இனிப்புகள் செய்து வைப்பதாகவும், சமரசமாகப் போகலாம் என்றும் கூறி அழைத்துள்ளார். இதை நம்பிய காதலன், எந்தவித சந்தேகமுமின்றி அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது, மீண்டும் திருமண விவகாரம் தொடர்பாகத் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த அந்தப் பெண், திடீரெனக் கத்தியை எடுத்து காதலனின் பிறப்புறுப்பைத் துண்டித்துள்ளார்.


காயமடைந்த அந்த நபர் ரத்தம் சொட்டச் சொட்ட தனது வீட்டுக்கு விரைந்தார். அவரது நிலையைப் பார்த்த அவரது பிள்ளைகள், அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது பிறப்புறுப்பில் காயம் பலமாக இருப்பதால் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனராம். 


போலீஸார் அந்தப் பெண் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் தலைமறைவாகி விட்டார்.