ஆண்களுக்குள்ளே தான் பெண்கள்!

Su.tha Arivalagan
Jul 15, 2026,10:43 AM IST

- டிலாணி ஸ்ரீதரன்


பெண் குலவிளக்கானவள் 

தாத்தாவின் பரம்பரையில்!


பெண் தாய்மையானவள் 

கணவனின் அரவணைப்பில்!


பெண் தேவதையானவள் 

அப்பாவின் வளர்ப்பில்! 




பெண் அன்பானவள் 

சகோதரனின் உறவில்! 


பெண் அழகானவள் 

கவிஞனின் வர்ணிப்பில்! 


பெண் மென்மையானவள் 

காதலனின் வருடலில்! 


பெண் பொறுமையானவள் 

குடும்பத்தின் பொறுப்பில்! 


பெண் பூவானவள் 

ஆடவர்களின் பார்வையில்! 


பெண் இன்னொரு தாயானவள் 

மகனின் திருமணத்தில்! 


பெண் புனிதமானவள் 

வாழ்க்கைத்துணையின் கூடலில்!


பெண் வீரமானவள் 

மூர்க்கர்களின் வலையில்! 


பெண் தன்னம்பிக்கையானவள் 

மணாளனின் இறப்பில்! 


பெண் சாதிப்பவள் 

ஆசான்களின் வழிநடத்தலில்! 


பெண் காவியமானவள்

கலைஞனின் உணர்வில்! 


பெண் ஓவியமானவள் 

ஓவியனின் தூரிகையில்! 


பெண் புதுமைப் பெண்ணானவள் 

எட்டயபுரத்தானின் ஏவலில்!


பெண் இல்லையேல் ஏது இவ்வுலகில் உயிர்ப்பு!


ஆண் இல்லையேல் பெண்மைக்கு ஏது மதிப்பு!


பெண் ஆண்களையும் வர்ணிப்பவள் 

பேதையிவளின் தூவலில்!!!


(டிலாணி ஸ்ரீதரன், பதுளை, இலங்கை)